மாமியார் உவமையும் மார்க்க அறிஞர் நிலைமையும்
மாமியார் உவமையும்
மார்க்க அறிஞர் நிலைமையும்
♦♦♦♦♦♦♦♦♦♦
26-01--19
கட்டுரை எண்1228
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
யார் என்றே தெரியாத நபர்களின் கப்ருகளுக்கு சென்று தேவைகளை கேட்டு துஆ செய்யும் முஸ்லிம்கள்
இன்று வரை வானுகில் இறைவனின் கண்காணிப்பில் உயிரோடு இருக்கின்ற
உலகில் வாழும் போது பல விதமான அற்புதங்களை செய்து காட்டிய
பிறந்த உடன் தொட்டில் குழந்தையில் பேசிய
சிறு குழந்தையிலேயே இறைவனால் நபியாக தேர்வு செய்யப்பட்ட
சிறு குழந்தையிலேயே இறைவன் மூலம் வேதம் பெற்ற
தந்தை இல்லாது அதிசயமாக பிறந்த
இனியும் உலக அழிவு நெருக்கத்தில் வர இருக்கின்ற
நபி (ஈஸா ) அலை அவர்களிடம் கையேந்தும் கிருஸ்தவர்களை காஃபிர்கள் என்றும் வழிகேடர்கள் என்றும் சொல்வதில் என்ன பகுத்தறிவு உள்ளது ?
ஈஸா நபியை முன்னோக்கி பாதுகாவலரே என்று கூறி கையேந்தினாலே பாவம் என்றால்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மரணித்து விட்ட பக்தாதில் அடக்கம் செய்யப்பட்ட
அப்துல் காதிர் ஜைலானி ( ரஹ்)
அவர்களை முன்னோக்கி
யாகவுசுல் அஃலம்
( உயர்ந்த பாதுகாவலரே)
என்று வாய் கூசாது அழைத்து துஆ செய்வது மட்டும் சுன்னத்தான காரியமா ?
மாமியா உடைத்தால் மண் சட்டி
மருமகள் உடைத்தால் பொன் சட்டியா ?
காஃபிர் என்ற நிலையில் இருந்து நபி ஈஸா (அலை) அவர்களிடம் கையேந்தினால் அவர்கள் இணைவைப்பாளர்கள் என்றால்
அவர்கள் நிறந்தரமான நரகவாதிகள் என்றால்
முஸ்லிம் என்று பெயரை வைத்து கொண்டு கேள்விபடும் மகான்களின் கப்ருகளுக்கு சென்று கையேந்துவது மட்டும் எப்படி சுன்னத்தாக மாறும் ?
இந்த இழிநிலை காரியத்தை செய்வதால் எப்படி இறைவனின் அன்பை பெற முடியும் ?
பாமரனும் இந்த விசயத்தை சரியாக அறியவில்லை
மார்க்கம் படித்த மேதைகளும் ( ஆலீம்களும்) இந்த விசயத்தை தெளிவாக புரியவில்லை
முதலில் மார்க்கம் படித்து பட்டம் பெற்றதாக சொல்லும் மார்க்க அறிஞர்களுக்கு தான் இஸ்லாம் கூறும் இணை வைத்தல் என்றால் என்ன ? என்ற பாடத்தை நடத்த வேண்டும்
இஸ்லாமிய அடிப்படை பாடத்தில் கூட அடிப்படை ஞானம் இல்லாதவர்கள்
ஆலீம் என்றும் அஜ்ரத் என்றும் உலமா என்றும் கிப்லா என்றும் அடை பெயர் சூட்டி திரிவது அறிவீனமான காரியமாகும்
اَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ اُولٰٓٮِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِى الزُّبُرِ
(சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா ?
அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா ?
(அல்குர்ஆன் : 54:43)
اِنَّ الَّذِيْنَ يُنَادُوْنَكَ مِنْ وَّرَآءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே
(அல்குர்ஆன் : 49:4)
இப்படிக்கு J . இம்தாதி
Comments
Post a Comment