Musicaley tiktok வேசிகளின் சாயலாகிறது

          Musicaley Tiktok

   வேசிகளின் சாயலாகிறது

    ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1222

       31--11-18 திங்கள் கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

சீனாவின் பைடான் எனும் நிறுவனத்திற்க்கு சொந்தமான மியூசிகலி டிக்டொக் போன்றவைகள் சமீபகாலமாக

இளைய சமூகத்தின் சிந்தனையை சீரழிக்கும் செயலியாகவும் ஆபாச தளங்களின் மறு வடிவமாகவும் வலம் வருகிறது

சினிமா சீரியல் போதையில் சிக்குன்டவர்களும் ஒழுக்க கேடுகளை கற்பிக்கும் கூத்தாடிகளின் செய்கைகளுக்கு ஏற்று  தங்களது கற்பனை உலகை வெளிப்படுத்தி வரும் உளவியல் நோயாளிகளாக இதன் மூலம் மாறி வருகின்றனர்

வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் அமையுமானால் அவைகளை வழிகேடுகளுக்கு மட்டும் பயன்படுத்தும் பலவீனம் உடையவர்களாக மனிதர்கள்   இருப்பார்கள் என்ற சாத்தானிய  வாக்கு இப்போது மெய்படுத்தி விட்டது

காமரசம் சிந்தும் திரைப்பட வசனங்கள் பாடல்களுக்கு ஏற்று தங்களது கனபரிமானங்களை வெளிப்படுத்தி தங்களை முழு வேசிகளை போல் காட்டி தாய்மையின் சிறப்பையும் கெடுத்து  பெண்மையின் கண்ணியத்தையும்  புதை குழியில் போட்டு மூடும் வேலையை இளம் பெண்கள் முதல் குடும்ப பெண்கள் வரை இந்த செயலிகளில்  கனகச்சிதமாக வெளிப்படுத்தி  வருகின்றனர் 

இதில் பர்தாக்களை அணிந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையை முஸ்லிம் பெண்களே செய்து வருவது அவமானத்திற்க்குரிய செயலாகும்

இது போன்றோரின் குடும்பம்  எந்த ஜமாத்தில் அங்கம் வகித்தாலும் அவர்களை ஜமாத்தில் இருந்து நீக்கும் வேலையை தாட்சன்யம் இல்லாது அரங்கேற்ற வேண்டும்

முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த காரியத்தை செய்யும் போது அதை கடுமையாக கண்டிக்கும் பலர்கள்
அதே காரியத்தை முஸ்லிம் பெண்கள் செய்யும் போது அதற்க்கு முட்டு கொடுத்து மூடி மறைப்பது இஸ்லாம் கடுமையாக  கண்டிக்கும்  இன உணர்வின் வெளிப்பாடாகும்

இவைகளில் பங்கு பெறும் ஆடவர்களை முஸ்லிம் பெண்களும் திருமணம் செய்வதை வெறுக்க வேண்டும்

இவைகளில் பங்கு பெறும் பெண்களை முஸ்லிம் இளைஞர்களும் திருமணம் செய்வதை வெறுக்க வேண்டும்

படிப்பினைகளை சொல்லும் போது அவைகளை உதாசீதனம் செய்து விட்டு பிறகு சிக்கலில் சிக்கும் போது ஆடவர்களை மாத்திரம் குற்றவாளிகளாக முன்னிலை படுத்தி தன்னை உத்தமிகளாக காட்டி கொள்ளும் நாசகார  பெண்களின் தந்திரத்தை ஆண்கள் அறிய வேண்டும்

அதே போல் வாய்ப்புகள் அமையும் போது எந்த ஆடவனும் அவனது ஆண்மையை மாத்திரம் தான் வெளிப்படுத்துவான் என்ற ஆடவனின் பலவீனத்தை பெண்களும் அறிய வேண்டும்

கட்டுப்பாடுகள் இல்லாத எந்த சுதந்திரமும் மனிதனை நல்வழி படுத்தாது என்பதற்க்கு இதுவும் ஒரு ஆழமான சான்று

وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً   وَسَآءَ سَبِيْلًا‏ 

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும் மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது

         (அல்குர்ஆன் : 17:32)

         நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்