மனமே மாளிகையின் மகிழ்வை தரும்
மனமே மாளிகையின் மகிழ்வை தீர்மானிக்கும் ♦♦♦♦♦♦♦♦♦♦ கட்டுரை எண் 1204 17 -11-18 செவ்வாய் கிழமை !!J . Yaseen iMthadhi !! ************** بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ★★★★★★★★★★★ தன்னிடம் இருப்பதை இறைவனின் அருளாக கருதாத மனிதன் தன்னிடம் இல்லாததையும் இயலாததையும் பெரிய அருளாக கருதும் உளவியல் நோயாளியாகவே உலகில் வலம் வருகிறான் இந்த உளவியல் நோயால் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவர்களை விட குடும்ப தலைவிகளே அதிகம் பீரோ முழுவதும் அடுக்கி வைக்கப்பட்ட நல்ல ஆடைகளை கூட பழைய ஆடையாக கருதி ஜவுளிகடையில் உள்ள புத்தாடைகளுக்கு ஏங்கும் இல்லத்தரசிகள் ஏராளம் ஆனால் அவர்கள் பழைய ஆடையாக கருதும் துணிகளை கூட பிளாட்பாரத்தில் புதிய ஆடையாக வாங்கி மகிந்து செல்லும் பரம ஏழைகளே ஆயிரமாயிரம் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர் போத்தீஸ் போன்ற துணிகடைகளுக்கு அதிபதிகளாக இருக்கும் முதலாளிகள் கூட அதை நினைத்து முழு மகிழ்ச்சி அடைகிறார்களோ இல்லையோ ஆனால் நாம் உடுத்தி வெறுத்த பழைய ஆடைகளை சேகரித்து அதன் மூலம