சீரழியும் இளைய தலைமுறை
சீரழியும் இளைய தலை முறை
சீரழிக்கும் சமூக வலைதளம்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1204
17 -11-18 செவ்வாய் கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
21 ம் நூற்றாண்டில் மனிதன் தன்னை பெரிய சாதனையாளனாக காட்டி கொண்டாலும்
ஒழுக்கத்திலும் பண்பாடுகளிலும் மிகவும் கீழ் தரமான நிலையை நோக்கியே பயணிக்கிறான்
சமூகவலைதளங்களில் அங்கம் வகிப்பதே ஒழுக்க கேடுகளை ரசிப்பதற்க்கும் அவைகளை பரப்பி பிறர்களை வழி கெடுப்பதற்க்கும் என்றே நிலைமை மாறி விட்டது
இல்லங்களில் பெற்றோர்களுக்கு பிள்ளைகளாக காட்சி தரும் பலர்கள் வெளியுலகில் மிகவும் கேவலமானவர்களாக வலம் வருகின்றனர்
இதில் பல இளம் பெண்கள் ஆயிரம் முறை பல பாதிப்புகளை ஊடகங்களில் பார்த்தாலும் அதன் மூலம் படிப்பினை பெற வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாத அறிவிலிகளாகவே உள்ளனர்
குறிப்பாக கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் இதில் கரை கண்டவர்களாக இருப்பது தான் சாபக்கேடு
பெற்றவர்கள் எந்த அளவுக்கு இலட்சிய கனவுகளோடு தன்னை படிக்க வைக்கின்றனர் என்பதை கூட புரியாத அறிவிலிகளாக ஆடவர்கள் உள்ளனர்
காதல் காமம் என்றே வாழ்நாளில் தங்களது அநேகமான நேரத்தை செலவழித்து மனநோயாளிகளாக ஆடவர்கள் இருப்பது தான் அவர்களின் பிற்கால வாழ்வை கீழ்நிலை நோக்கி தள்ளி விடும் என்ற வாழ்கை பாடத்தை ஆடவர்கள் உணருவது இல்லை
ஒரு ஆடவன் காதலிக்கும் பெண்ணுக்காக இவனே மொபைல் ரீசார்ஜ் செய்து விட்டு அவளிடம் அந்தரங்கத்தில் பேசுவதற்க்கு இவனும் தனது மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து அவளிடம் கால் செய்து பேசும் அளவு அடிமுட்டாள்களாக ஆடவர்கள் உள்ளனர்
சினிமா கூத்தாடிகளின் மீது உள்ள மோகமும் சீரழிவு சிந்தனையுமே இந்நிலைக்கு அடிப்படை காரணம்
இஸ்லாத்தை கற்று தந்து அவளை முஸ்லிமாக மாற்றி பிறகு திருமணம் செய்ய போகிறேன் என்கிற பெயரிலே மார்க்கத்தின் பெயரால் சீரழியும் இளைஞர்கள் ஒரு புறம்
பர்தாக்களை அணிந்து கொண்டு வேலைக்கு செல்கிறோம் எனும் பெயரில் முஸ்லிம் இளம் பெண்களில் பலர்கள் இவ்வாறு சீரழிவதை பரவலாக காண முடிகின்றது
இது போல் சீரழிவை இவர்களே விரும்பி தேர்வு செய்யும் நிலையில் அவர்களை முதல் குற்றவாளியாக பார்க்காமல் இது இஸ்லாமிய எதிரிகளின் சதி என்றும் சூழ்ச்சி என்றும் தங்களுக்கு தாங்களே இந்த அவமானத்திற்க்கு பிற சமூக மக்களை பலி கடாவாக சித்தரிக்கும் முஸ்லிம்களின் நிலையை எவரும் கண்டிப்பது இல்லை
இந்த குற்றத்தில் பெற்றோர்கள் ஒரு புறம் இருந்தாலும் இவர்களின் நண்பர்கள் முக்கிய காரணம் என்பதை மறந்து விட கூடாது
அவமானம் ஏற்படும் பொழுது இவர்களின் நண்பனும் கை கொடுக்கப்போவது இல்லை
இவர்களின் தந்திரங்களும் கை கொடுக்கப்போவது இல்லை
عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَثْبُتَ الْجَهْلُ وَيُشْرَبَ الْخَمْرُ وَيَظْهَرَ الزِّنَا
உலகிலிருந்து இல்மு உயர்த்தப்படுவதும், அறியாமை பரவுவதும் (பகிரங்கமாக) மது அருந்தப்படுவதும், விபச்சாரம் பரவுவதும், இறுதித் தீர்ப்பு நாளின் அடையாளங்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் புகாரி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment