விளம்பரங்கள் எதற்காக

    விளம்பரங்கள் புகழுக்காக
              அல்ல மாறாக
அந்நியப்பட்ட பார்வைகளை
          அரவணைப்பதற்காக

  ♦♦♦♦♦♦♦♦♦♦

     26 -11-18  சனி கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************

                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

நிவாரண நிதிகளே போய் சேராது நிதிகளை  அனுப்புவதாக கூறும் சினிமா  நடிகர்களின் பேட்டிகளை தியாக  செய்தியாக போடும் ஊடகங்கள்

கஜா புயல் பாதிப்பு நேரடி களத்தில் இந்த நிமிடம் வரை பொருளாலும் உடலாலும் தியாகம் செய்யும் முஸ்லிம் சமூகத்தின் தியாகங்களை விரைவு செய்தியாக கூட அறிவிக்க மனம் இல்லாத அரக்க குணம் உள்ள ஊடகங்களாக மாறி விட்டது

மதவெறியர்களின் கைகளில்  அனைத்து ஊடகங்களும் முடங்கி போய்  உள்ளது

உன் சமுதாய தியாக உணர்வுகளை சேவைகளை  மக்களுக்கு நீ விளம்பரம் செய்யாது வேறு யார் விளம்பரம் செய்வார்கள்  ?

விளம்பரங்கள் செய்வது பிறர்கள் உன் சமுதாயத்தை புகழ வேண்டும் என்பதற்காக  அல்ல

மாறாக உன்  சமூகத்தை இந்திய திருநாட்டின் அந்நியர்களாகவே நெடுங்காலமாக  சித்தரித்து கொண்டுள்ள கயவர்களின் துஷ்பிரச்சாரத்தை முடக்குவதற்காக மட்டுமே

இனி ஒரு போதும் நம் இந்திய திருநாட்டின் ஒரு பள்ளிவாசல் கூட பாபர் மஸ்ஜிதை போல் இடிக்க பட கூடாது என்று மாற்றார்களே அறிக்கை போட்டு மகிழ்கிறார்கள் என்றால் பாபர் மஸ்ஜித்  இடித்தவர்களை கண்டிக்கிறார்கள் என்றால்

அதற்க்கு மூல காரணம் இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட உன் சமுதாய  பள்ளிவாசல்களை பொது அறிக்கை கொடுத்து
திறந்து வைத்து விட்டு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மதத்தினர்களும் இங்கு வந்து தங்கி கொள்ளலாம் என்று அறிவிப்பும் செய்து

அதை ஏற்று கொண்டு இந்து சகோதர சகோதரிகளும் குழந்தைகளோடு  பள்ளிவாசலில் வந்து தங்கியுள்ளவர்களின் புகைப்படத்தை நீ விளம்பரம் செய்தாயே அது தான் மூல காரணம்

தீவிரவாதிகள்  பயங்கரவாதிகள் என்று காலம் காலமாக உன் சமுதாயத்தை ஊடகங்களில் சித்தரித்து வந்த காவி சிந்தனை உள்ள  கயவர்கள் எல்லாம் 
இன்றைக்கு அந்த வார்த்தையை பிரசுரிக்கவும் செய்தியாக சொல்வதற்க்கும் கூட தயங்குவதற்க்கு  தவிர்த்திருப்பதற்க்கு மூல காரணம் முஸ்லிம்  சமுதாயம் செய்து வரும் தியாகத்தை விளம்பரம் செய்தது தான் மூல காரணம்

எனவே அல்லாவுக்காக செய்வதை விளம்பரம் செய்வது ஏன் ? என்று சிந்தனையின்றி அறிக்கை போடுவதை தவிர்த்து விட்டு இனிமேலாவது சமூகத்தின் கண்ணியத்தை தியாகத்தை அதிகமதிகம் விளம்பரம் செய்யுங்கள்

பிற இயக்கங்களை தூற்றுவதை விட அவர்கள் செய்யும் தியாகங்களை போற்றுவது எந்த விதத்திலும் குறைந்தது அல்ல

இந்த விளம்பரங்கள் தனி மனிதர்களை துதிப்பதற்காக அல்ல

மாறாக முஸ்லிம் சமுதாய தியாகத்தை பிற சமூகம் உணர்ந்து கொள்வதற்காக

அதன் மூலம் அவர்களின் காழ்ப்புணர்வை கலைவதற்காக

தான தர்மத்தை விளம்பரம் செய்வதை தவிர்க்க சொல்லும் இஸ்லாம்

ஜகாத் என்ற பொதுநிதிகளை விளம்பரம் செய்து வினியோகம் செய்வதை வரவேற்கிறது 

காரணம் அது பெருமை குற்றம் அல்ல மாறாக நம் சமுதாய பெருந்தன்மையை பிறருக்கு புரிய வைப்பதற்காக

அவ்வகையில் குமரிமாவட்டம் வேர்கிளம்பி  JAQH கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாசல் சார்பாகவும் ஊர் மக்கள் சார்பாகவும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம் கொடுப்பதற்காக நிதிகளை திரட்டி அதன் மூலம் பெறப்பட்ட பொருள்களும் சகோதரர்களின் புகைப்படங்களில் சிலது இது

اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِيَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَؔ‏ 

யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்  இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது

அவர்களுக்கு அச்சமும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

       (அல்குர்ஆன் : 2:274)

      நட்புடன்  J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்