இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது
இயற்கை சீற்றங்களில்
இஸ்லாம் மிளிர்கிறது
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1202
16 -11-18 வெள்ளி கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
ஒரு மதத்தில் அல்லது மார்க்கத்தில் எந்தளவுக்கு
மனித நேயமும் கருணை தன்மையும் வலியுருத்தப்பட்டு உள்ளது என்பதை நடை முறை ரீதியாக உணர வைக்கும் நிகழ்வுகளே இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் பாதிப்புகளின் தாக்கம்
தமிழகத்தை பொறுத்தவரை இது போன்ற நிகழ்வுகளில் சில தனியார் நிறுவனங்களும் பல தனி மனிதர்களும் மக்கள் சேவையில் ஈடுபட்டாலும்
மத ரீதியில் இது போன்ற சீற்றங்களின் போது முன்னனியில் இருப்பது முஸ்லிம் சமூகத்தை சார்ந்த இயக்கங்களே என்பதை முஸ்லிம் அல்லாதவர்களும் அனுபவ ரீதியாக உணர்ந்தே உள்ளனர்
பொருளாதார ரீதியாகவும் உடல் உழைப்பு ரீதியாகவும் மக்கள் சேவை ஆற்றுவதில் முஸ்லிம் சமூகத்தை இதுவரை எவரும் முந்தவில்லை என்பதும் மகிழ்ச்சிக்கு உரிய விசயமே
முஸ்லிம் என்றாலே தீவிரவாதி பயங்கரவாதி என்று முஸ்லிம் அல்லாதவர்கள் அஞ்சும் அளவு ஊடகங்களில் பல வருடங்களாக போலியாக சித்தரித்து வந்த அவப்பெயர்களை கூட இது போன்ற நிகழ்வுகள் தான் முஸ்லிம் அல்லாதவர்களின் உள்ளங்களில் இருந்த பயத்தை தவிடு பொடியாக்கி கயவர்களின் பொய் பிரச்சாரத்தையும் அடையாளம் இல்லாமல் செய்து விட்டது
பிறர்களின் இரத்தத்தை எடுப்பவன் முஸ்லிம் அல்ல மாறாக ஆபத்தான நிலையில் சிக்கி தவிக்கும் நோயாளிகளுக்கு மதம் மொழி இனம் பார்க்காது தனது ரத்தத்தை கொடுத்து அவர்கள் ஆரோக்யமாக வாழ வலிய சென்று உதவுபவனே நல்ல முஸ்லிம் என்ற பெயரும் கூட தற்போது முஸ்லிம்களுக்கு உரித்தான சொல்லாக மாறி விட்டது
இது போன்ற சேவைகளை மற்ற எவர்களை விடவும் முஸ்லிம்கள் முந்தி கொண்டு செய்வது எந்த நோக்கத்திற்காக ?
அல்லது எந்த புகழை அடைவதற்காக ?
என்ற கேள்விக்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஒரே பதில்
இறைவனின் திருப்தியை பெறுவதற்காக என்றே அமைந்திருக்கும்
காரணம் மனிதனின் உலக வாழ்வு என்பது அர்ப்பத்திலும் மிகவும் அர்ப்பம்
அதே நேரம் மனிதனின் மரணத்திற்க்கு பின்னால் மனிதன் சந்திக்கவிருக்கும் மறுமை வாழ்வு என்பது நிறந்தரமானது நிலையானது
அந்த நிலையான வாழ்வில் நிம்மதியான வாழ்கையை அடைவதற்க்கு
உலக வாழ்வில் நாம் செய்யும் சேவைகளின் பிரதிபலன்களே நன்மைகளே மறுமையில் இறைவனின் சந்நிதானத்தில் முதலிடம் வகிக்கிறது
என்று போதனை செய்தவர் மாமனிதர் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள்
மதம் மனிதனை அரக்கனாக்கும் என்ற தப்பான பிரச்சாரத்தை முறியடித்து தெளிவான மார்க்க நம்பிக்கையே மனிதனை தயாளானாக கருணை சீலனாக மனித நேய வடிவமாக மாற்றும் என்ற வாழ்கை நெறியை கற்று தந்தவர் நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள்
عَنْ اَبِيْ مُوْسَي اْلاَشْعَرِيِّ ؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: عَلَي كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ، قَالُوْا: فَاِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ، قَالُوْا: فَاِنْ لَمْ يَسْتَطِعْ اَوْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَيُعِيْنُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوْفِ، قَالُوْا: فَاِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيَاْمُرْ بِالْخَيْرِ اَوْ قَالَ: بِالْمَعْرُوْفِ، قَالَ: فَاِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ فَاِنَّهُ لَهُ صَدَقَةٌ
முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் தர்மம் செய்வது அவசியம்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது
அவரிடத்தில் தர்மம் செய்ய எதுமில்லையென்றால் என்ன செய்வது? என மக்கள் கேட்டார்கள்
அத்தகையவர் தமது கரங்களால் உழைத்துத் தானும் பலனடைந்து தர்மமும் செய்யவும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
இதுவும் அவருக்கு இயலவில்லை யென்றால் ? என மக்கள் கேட்டார்கள்
துன்பத்தில் சிக்குண்ட தேவையுடையோருக்கு உதவி செய்யவும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
இதுவும் செய்ய. இயலவில்லையென்றால்? என மக்கள் கேட்டார்கள்
எவருக்கேனும் நல்லதை ஏவவும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்
இதுவும் செய்யவில்லை யென்றால்! என்று மக்கள் கேட்க குறைந்த பட்சம் பிறருக்கு சிரமம் கொடுக்காமலாவது இருக்கட்டும்
ஏனேனில், பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் அவருக்கு தர்மம் தான்
என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
என்ற ஹதீஸை ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் புகாரி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment