மனமே மாளிகையின் மகிழ்வை தரும்
மனமே மாளிகையின்
மகிழ்வை தீர்மானிக்கும்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1204
17 -11-18 செவ்வாய் கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
தன்னிடம் இருப்பதை இறைவனின் அருளாக கருதாத மனிதன்
தன்னிடம் இல்லாததையும் இயலாததையும் பெரிய அருளாக கருதும் உளவியல் நோயாளியாகவே உலகில் வலம் வருகிறான்
இந்த உளவியல் நோயால் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவர்களை விட குடும்ப தலைவிகளே அதிகம்
பீரோ முழுவதும் அடுக்கி வைக்கப்பட்ட நல்ல ஆடைகளை கூட பழைய ஆடையாக கருதி ஜவுளிகடையில் உள்ள புத்தாடைகளுக்கு ஏங்கும் இல்லத்தரசிகள் ஏராளம்
ஆனால் அவர்கள் பழைய ஆடையாக கருதும் துணிகளை கூட பிளாட்பாரத்தில் புதிய ஆடையாக வாங்கி மகிந்து செல்லும் பரம ஏழைகளே ஆயிரமாயிரம் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர்
போத்தீஸ் போன்ற துணிகடைகளுக்கு அதிபதிகளாக இருக்கும் முதலாளிகள் கூட
அதை நினைத்து முழு மகிழ்ச்சி அடைகிறார்களோ இல்லையோ
ஆனால் நாம் உடுத்தி வெறுத்த பழைய ஆடைகளை சேகரித்து அதன் மூலம் ஒரு பிளாட்பார்ம் கடைக்கு முதலாளியாக இருக்கும் இது போல் முதிய பருவ ஏழைகளிடத்தில் இருக்கும் மகிழ்ச்சியே மங்கலகரமானது மட்டில்லாதது
அருகில் இருப்பது குப்பை தொட்டி என்றாலும் தனது மனதில் இருக்கும் உள்ளத்தின் தன்நம்பிக்கையே பரம ஏழை மக்களின் மன தைரியம்
ஆதலால் தான் குப்பை தொட்டிகளுக்கு அருகாமையில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் எவ்விதமான அச்சமும் இல்லாது
மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்
மனசை பார்த்து தான்
வாழ்வை மாத்துவான்
ஏ மனமே கலங்காதே
வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்
என்ற நம்பிக்கையில் வாழ்நாளை கழித்து வருகின்றனர்
وَهُوَ الَّذِىْ جَعَلَـكُمْ خَلٰٓٮِٕفَ الْاَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ اِنَّ رَبَّكَ سَرِيْعُ الْعِقَابِ وَاِنَّهٗ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ
அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்
அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன் மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன் மிக்க கருணையுடயவன்
(அல்குர்ஆன் : 6:165)
وَلَقَدْ مَكَّـنّٰكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்
அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்
(அல்குர்ஆன் : 7:10)
وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை
மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும்
அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன
(அல்குர்ஆன் : 11:6)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment