சினிமா அடிமைகளும் நடிகர் சிவகுமாரும்

  நடிகர் சிவகுமார் அநாகரீக செயலில்
             சினிமா அடிமைகள்

  !!  கற்க வேண்டிய படிப்பினை !!

       ♦♦♦♦♦♦♦♦♦♦

                    30-10--18
         கட்டுரை எண்1194      
             
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

வரலாறுகளும் நிகழ்வுகளும் மனித சமுதாயத்திற்க்கு படிப்பினைகளை தர வேண்டும்

அதற்க்கு ஏற்று தான் எச்சரிக்கை செய்வோரும் தனது போதனைகளை பதிவுகளை அமைக்க  வேண்டும்

நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட திறப்பு நிகழ்ச்சியில் செல்பி எடுத்த ஒரு இளைஞனின் மொபைலை தள்ளி விட்டு அநாகரீகமாக நடந்து கொண்டார் என்றால் அதன் மூலம் மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய போதனைகள்  என்ன ?

இந்த நடிகனை பாருங்கள் இவர் தனது ரசிகன்  செல்பி எடுப்பதற்க்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார்

அந்த நடிகையை பாருங்கள் அவர் தனது ரசிகர் செல்பி எடுப்பதற்க்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் 

என்று மீண்டும் மீண்டும் மடமைத்தனத்தை நோக்கி மக்கள் அறிவை திசை திருப்பும்  சூழலையே பார்க்கிறோம்

ஒரு வகையில் இவ்வாறு சுட்டி காட்டுபவர்களும் கூத்தாடிகளின் மறைமுக  ரசிகர்களாகவும் அடிமைகளாகவும்  உள்ளனர்

சினிமா என்பது கூத்தாடிகளுக்கு ஒரு தொழில் அவ்வளவு தான்

அதில் நடிக்கிற காரணத்தால் அவர்களை புனிதர்கள் என்றோ தியாகிகள் என்றோ மக்கள் சேவகர்கள் என்றோ மக்களின் தலைவர்கள் என்றோ நினைப்பது தான் முதல் மடமை ஆகும்

காசு கொடுத்தால் எதையும் திறந்து காட்டி நடிக்கும் அளவு ஒழுக்கம் கெட்டவர்கள் தான் சினிமா கூத்தாடிகள்  என்பதற்க்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் உள்ளது

சினிமாவிலும் சீரியல்களிலும் குடும்ப பெண்களாக நடிக்கும் நடிகைகளும்
கற்புக்கு அரசர்களாக நடிக்கும் நடிகர்களும் 
இரவு நேரங்களில் பார்களிலும் கிளப்புகளிலும் கலந்து கொண்டு விபச்சாரத்தில் கொடி கட்டி பறப்பதை ஊடகங்களில் அன்றாடம் செய்திகளாக வலம் வருகிறது

வீட்டிற்க்கு வேலை செய்ய சலிப்படையும் இளைய சமூகம்  நடிகனின் கட்டவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்யும் அளவு மடைமையில் மூழ்கி உள்ளனர்

இது போன்ற அறிவிலிகளுக்கு போதனைகள் தராத மாற்றங்களை  நடிகர் சிவகுமார் போன்றவர்களின் அநாகரீகமான  நடைமுறை உடனடியாக  மாற்றத்தை தரும்

நடிகர் சிவகுமாரை செல்பி எடுத்து கேவலப்பட்ட இளைஞன் இனி ரஜினிகாந்த் செல்பி எடுக்க அழைத்தாலும் ஆர்வம் காட்ட மாட்டான் என்பதே உண்மை

உலகம் முழுவதும் கூத்தாடிகள்  நாட்டை ஆளும் அவல நிலைக்கு இது போல் அறிவு இழந்த ரசிகர்கள் தான் மூல காரணம்

இனிமேலாவது  சினிமா மோகத்தையும் சீரியல் மோகத்தையும் கூத்தாடிகளை தேவலோக பிறவிகளாக பார்க்கும் அவலத்தையும் மக்கள் கைவிட வேண்டும்


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌  وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ 

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்

இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றுகிறானோ அவனை ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்

      (அல்குர்ஆன் : 24:21)

        நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்