சஹாக்களை தக்க வைக்க சஹாபாக்களை சாதகமாக்கும் பீஜே
சஹாக்களை தக்க வைக்க
சஹாபாக்களை சாதகமாக்கும்
P . ZAINUL ABIDEEN
♦♦♦♦♦♦♦♦♦♦
24-10--18
கட்டுரை எண்1192 புதன் கிழமை
!!J . Yaseen iMthadhi !!
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
முஸ்லிம் சமூகத்தில் ஒருவர் தவறான காரியத்தை செய்து விட்டு அதற்காக வருந்தும் போது அவருடைய ஈமானை சீர் செய்யும் விதமாக
கவலைபடாதீர்கள் இஸ்லாத்திற்காக தியாகம் செய்த சஹாபாக்களில் சிலரே இஸ்லாத்தை அறிந்து ஏற்று கொள்வதற்க்கு முன் பல தவறுகளை செய்துள்ளனர் ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் அவர்களுடைய பாவங்களை இறைவன் மன்னித்தான் அவர்களும் அதன் பின் ஈமானில் சிறந்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கே முன்னோடிகளாக வாழ்ந்து காட்டினார்கள் என்று ஒருவர் சஹாபாக்கள் வரலாறை நினைவு கூறினால் அது சஹாபாக்களை இழிவு செய்ததாக ஆகாது
மாறாக சஹாபாக்களின் ஈமானை நினைவு கூறி அவர்களை பாராட்டியதாகவே பார்க்கப்படும்
அதே நேரம் தவறான காரியத்தை செய்த ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்தது உண்மை என்று வாக்குமூலம் கொடுத்து விட்டு ஒரு சில நாட்கள் கழிந்த பிறகு
ஏன் சஹாபாக்கள் இஸ்லாத்திற்க்கு வருவதற்க்கு முன் பல விதமான தவறுகளை செய்யவில்லையா ?
மனிதன் தவறுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் படைக்கப்பட்டவனா என்று வாதித்தால் அந்த மனிதன் அவன் ஒப்பு கொண்ட தவறை நியாயப்படுத்துவதோடு அதற்க்கு ஏற்ற நிலையில் சஹாபாக்களையும் இழிவு படுத்துகின்றான் என்பதே பொருளாகும்
இன்றைக்கு இந்த வாதத்தை தான் தவ்ஹீத் ஜமாதில் இருந்து நீக்கப்பட்ட சகோதரர் பீஜே என்பவர் அப்பட்டமாக பேசி வருகிறார்
இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விசயமாகும்
அது போக இஸ்லாத்திற்க்கு வருவதற்க்கு முன்னால் சஹாபாக்கள் செய்த தவறுகளை மேற்கோள் காட்டி
இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் சூழலில்
குர்ஆனுக்கு தப்சீர் எழுதிய சூழலில்
ஹதீஸ்களுக்கு விளக்கம் தரும் சுழலில்
போலிச்சாமியார்களை கண்டித்து பல மேடைகளில் பேசிய சூழலில்
உங்கள் மீது சொல்லப்படும் குற்ற சாட்டுகளுக்கு ஆதாரங்களை நீங்கள் உருவாக்கிய ஜமாத்தினர்களே தெளிவாக வெளியிட்டு உங்களை அம்பலப்படுத்திய சூழலில்
அதை இது வரை நீங்கள் சட்ட ரீதியாக எதிர் கொள்ள தயங்கும் சூழலில்
சஹாபாக்களை வம்புக்கு இழுப்பது அநாகரீகமான செயலாகும்
உங்கள் வாதப்படி சஹாபாக்கள் தவறே செய்திருந்தாலும் அவர்களை இறைவன் மன்னித்து அருள் செய்ததற்க்கும்
அவர்களிடம் ஈமானிய முன்னுதாரணம் இருக்கிறது என்ற இறைவனே நற்சான்று வழங்கிய சஹாபாக்களை சிறப்பித்ததற்க்கும் குர்ஆனில் சான்றுகள் உண்டு
ஆனால் உங்கள் தூய்மையை நிலை நாட்ட உங்களிடம் என்ன சான்று இருக்கிறது ?
உங்களை அப்பாவித்தனமாக நம்பும் மக்களிடம் உங்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட வேறு என்ன சான்று அவர்களிடம் இருக்கிறது ?
சஹாபாக்களின் வீரத்தையும் தியாகத்தையும் எடுத்து சொல்லி முஸ்லிம்களிடம் ஈமானிய உணர்வை அதிகரிக்க செய்ய வேண்டிய மார்க்க உரைகளில்
சஹாபாக்களும் தவறு செய்தவர்கள் தான் சஹாபாக்களும் பல நேரங்களில் ஆசாபாசங்களுக்கு அடிமை பட்டவர்கள் தான் என்று பேசுவதால் முஸ்லிம்களின் ஈமான் எந்த முறையில் முன்னேற்றம் அடைய போகிறது
வாதத்திறமைகளை உண்மைகளுக்கு பயன் படுத்திய காலங்களில் எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு நீங்களே எதிர் பார்க்காத அளவுக்கு கண்ணியத்தையும் புகழ்சிகளையும் தந்தான்
அதே இறைவன் இன்று நீங்கள் உருவாக்கிய இயக்கவாதிகளை வைத்தே உங்கள் நிலையை மரியாதையை தரம் தாழ்த்தி விட்டான் என்பதை இனியும் சிந்திக்க மறுக்காதீர்கள்
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًاسِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்
அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களிடம் கண்டிப்பானவர்கள் தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்
ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்
அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்
இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும்
இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது
ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது
இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான்
ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்
(அல்குர்ஆன் : 48:29)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment