பயனற்ற ரமலான் விளம்பரம்
!பயனற்ற ரமலான் தகவல்கள்!
இனிதே ஆரம்பம்
*-------------------------------------*
16-05-18
J.யாஸீன் இம்தாதி
**************
Bismillahir Rahmanir Raheem
++++++++++++
ரமலான் துவங்கி விட்டாலே சமூகவலைதளம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு திறக்கும் போது உள்ள உணவை பற்றிய பேச்சும் அதை சார்ந்த ஸ்டில்களுமே அதிகம் இடம் பெறு
இதை அப்லோட் செய்வதால் யாருக்கு என்ன பலன் ?
அல்லது யாருக்கு என்ன நன்மை?
மாற்றாரின் பார்வையில் ரமலான் என்பது
ஏதோ முஸ்லிம்கள் பார்ப்பதை எல்லாம் வகை வகையாக சாப்பிட்டு உடலை செழிக்க வைக்கும் ஒரு மாதம் போலவே ரமலான் மாதத்தை பல வருடமாகவே சித்திரத்தை உண்டாக்கி வருகின்றனர்
நன்மைகளை எளிமையாக பரப்பும் தளங்களில் அங்கம் வகிக்க கூடியவர்கள் அந்த தளத்தை பயனற்ற ஒன்றை சேர் செய்வதற்க்கும் அப்லோட் செய்வதற்க்கும் பயன்படுத்துவது சிறு பிள்ளைத்தனமாக உள்ளது
அது போக நாம் நோற்க்கும் நோன்பிற்க்கும் சஹாபாக்கள் வைத்த நோன்பிற்க்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளது
ஒரு பேரீத்தம்பழத்தை சஹ்ரு உணவாகவும் அதே போல் ஒன்றை இப்தாருக்காகவும் உண்ணும் அளவு தான் அவர்களின் உணவு வசதியே இருந்தது
அதோடு ஒப்பிடும் போது
சுபுஹானல்லாஹ்
ரமலான் அல்லாத மாதங்களை விட ரமலானில் தான் நம் இஸ்லாமிய சமூகம் வகை வகையாக மாறுபட்ட ருசி கலந்த பல உணவை சாப்பிடும் பரகத்தை பெற்றுள்ளனர்
உணவிற்காக ஏனைய மாதங்களில் செய்யும் செலவுகளை விட
ரமலான் மாதத்தில் தான் அதிகமான செலவுகளை நம் சமூகம் செய்கின்றனர் என்பது அனைவருமே அனுபவத்தில் கண்டு வருகிறோம்
இதில் ஆண்களை பொறுத்தவரை அவர்களின் ரமலான் உணவு பெண்களை விட பல விதங்களில் பல இடங்களில் உண்ணும் வாய்ப்பே அமைகின்றது
சுருங்க சொன்னால் ஊட்ட சத்து மிகுந்த உணவுகளே ரமலானில் நாம் உண்ணுகின்றோம்
இதில் பெரிதாக பட்டினி கிடந்து இறைவனுக்காக நாம் நோன்பு நோற்கிறோம் என்றெல்லாம் இது போன்ற புகைப்படங்களை அப்லோட் செய்து காட்டுவது அர்த்தமற்றது இதை இக்காலத்தில் தியாகம் என்றே சொல்ல இயலாது
வழக்கமாக பகல் பொழுதில் சாப்பிடும் நமது உணவின் நேரத்தை சற்று மாற்றி மஃரிப் முதல் பஜ்ரு வரை இஷ்டத்திற்க்கு சாப்பிடுகிறோம் என்பதே உண்மை
இத்தகைய சூழலில் இப்தாருக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது செயல்பாடு அமையாமல் அந்த மாதத்தில் செய்ய வேண்டிய அமல்களில் கவனம் செலுத்தினால் போதுமானது
அதே போல் இறையில்லங்களில் செயல்படும் நிர்வாகம் ரமலானில் கஞ்சி காய்ச்சுவதிலும் பயான் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் முழு கவனம் செலுத்தாமல் மக்கள் அமல்களின் பக்கம் கவனம் செலுத்தும் வழி வகைகளில் மட்டுமே அக்கரையை அதிகரிக்க வேண்டும்
காரணம் ரமலானில் செய்கின்ற நல்ல இபாதத்துகளுக்கு கிடைக்கும் பல மடங்கு நன்மைகள் வேறு எதற்க்கும் கிடைக்க போவதில்லை
عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ كَانَ إِذَا صَلَّي بِالنَّاسِ يَخِرُّ رِجَالٌ مِنْ قَامَتِهِمْ فِي الصَّلاَةِ مِنَ الْخَصَاصَةِ وَهُمْ أَصْحَابُ الصُّفَّةِ حَتَّي تَقُولَ اْلاَعْرَابُ: هؤُلاَءِ مَجَانِينُ أَوْ مَجَانُونُ، فَإِذَا صَلَّي رَسُولُ اللهِ ﷺ انْصَرَفَ إِلَيْهِمْ، فَقَالَ: لَوْ تَعْلَمُونَ مَا لَكُمْ عِنْدَ اللهِ لَأَحْبَبْتُمْ أَنْ تَزْدَادُوا فَاقَةً وَحَاجَةً قَالَ فَضَالَةُ: وَأَنَا يَوْمَئِذٍ مَعَ رَسُولُ اللهِ ﷺ
ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தொழவைக்கும் போது, வரிசையிலிருக்கும் திண்ணைத் தோழர்களில் சிலர் பசியின் காரணமாகக் கீழே விழுந்துவிடுவார்கள்
கிராமவாசிகள் அவர்களைப் பார்த்து, இவர்கள் பைத்தியக்காரர்கள்'' என்று எண்ணுவர்
ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தொழவைத்த பின் அவர்களின் பக்கம் திரும்பி, அல்லாஹ்விடம் உங்களுக்கு இருக்கும் நன்மையை நீங்கள் அறிந்து கொண்டால் இதைவிடவும் அதிக வறுமையிலும், ஏழ்மையிலும் இருப்பதை விரும்புவீர்கள்'' என்று கூறினார்கள்
அன்றய தினம் நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன்'' என்று ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்
நட்புடன் J.இம்தாதி
Comments
Post a Comment