தூய்மை

          நாகரீகம் பேணுவோம்

       18-02-18- ஞாயிறு கிழமை

           ஜே.யாஸீன் இம்தாதி

  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

   Bismillahir Rahmanir Raheem
         =================

அதிகாலை எழுந்தவுடன் தூய்மை என்பதே மனிதனின் முதல் கடமை

தூய்மை என்றாலே பிறர்களின் பார்வைக்கு தென்படும் போது அவர்களுக்கு அருவெருப்பும் சலிப்பும் ஏற்படாமல் இருப்பதற்க்காகவும்  உடலியல்  ஆரோக்யம் பேணுவதற்க்கும் தான் செய்யப்படுகிறது

இதை கூட புரியாது காலை பல் துலக்கி கொண்டே பிறர்களிடம் வாயில் பேஸ்ட் நுரையை வைத்து கொண்டே பேசும் நபர்களையும் பால் இதர பொருள்கள் வாங்க  கடைகளுக்கு அதே நிலையில்  செல்லும் சிலர்களையும் நடை பாதைகளில் துப்பிக் கொண்டே செல்லும் அருவெருப்புகளையும் காண முடிகின்றது

பல் துலக்காதும் கூட பெட்காபி எனும் பெயரில் ஆரோக்ய வாழ்வுக்கு எதிராக செயல் படும் பல சோம்பேறிகளையும் பரவலாக காண முடிகின்றது

ஒரு நாளில் பல முறை உணவு மற்றும் குடிபானங்களை அருந்தும் வாயை கூட கடமைக்காக காலை ஒரு நேரம் மாத்திரம் தூய்மை செய்யும் மக்களையும் பார்க்கிறோம்

போதை தரும் மதுபானம் புகையிலை பொடிகள் பாக்கு வகைகளை தவறாது சாப்பிட்டு எப்போதும் தனது வாயை குப்பை தொட்டியை விட கேவலமான துர்வாடை கொண்ட  நிலையில் ஆரோக்யமற்று  வைத்திருக்கும் அநேக மனிதர்களையும் பரவலாக  காண முடிகின்றது

பலரது இல்லற வாழ்வின் இனிமை கெட்டு போவதற்க்கு சலிப்பை சந்திப்பதற்க்கும்  தம்பதியர்களின் வாய் மற்றும் இதர உறுப்புகளின்  தூய்மையற்ற நிலையே மூல காரணம்

விஞ்ஞான காலத்தில் வாழ்வதாக பெருமை பேசும் மனிதனுக்கு பிற மனிதர்களுக்கு அருவெருப்பு தராத வகையில் எப்படி நடந்து கொள்வது என்ற சிறிய நாகரீகம் கூட தெரிவது இல்லை

     ====================

888 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

    நூல் - ஸஹீஹ் புகாரி

          ===============

5891. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

இயற்கை மரபுகள் ஐந்தாகும் விருத்தசேதனம் செய்துகொள்வது மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக  சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

           நூல் - ஸஹீஹ் புகாரி

      ===================

          நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்