காமாக்யா கோயில்
ஆண்டாள் விவகாரத்தில்
ஆன்மீகவாதிகளுக்கு எதிரான
கேள்விகள்
===============
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1184
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
ஆன்மீக ரீதியாக பேசப்படும் எழுதப்படும் கருத்துக்களில் மாற்று கருத்து முற்றிப்போய் இரு சமூக மக்களிடமோ அல்லது சமூக தலைவர்களுக்கு இடையிலோ மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் அதை பக்குவமாக அணுகி மோதல் ஏற்படும் சூழலை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஆன்மீகம் பேசும் அறிஞர்களும் மதகுருமார்களும் ஈடுபடுவது தான் சிறந்த பண்பாட்டிற்க்கு சரியான அடையாளமாகும்
ஆனால் தற்போது ஆண்டாள் தொடர்பாக கவிஞர் வைரமுத்து பேசிய பேச்சுக்கு அவரே வருத்தம் தெரிவித்த பிறகும் அதை பூதாகரமாக சித்தரித்து சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் சூழ்ச்சிகளை திட்டமிட்டு செய்து வருவதை பரவலாக பார்க்கிறோம்
குறிப்பாக ஆன்மீக போர்வையிலும் மத ரீதியான போர்வையிலும் தங்களை இந்து மதத்தின் காவலாளிகளாக தம்பட்டம் அடிக்கும் சாமியார்களும் பீஜேபி கட்சியை சார்ந்த சிலர்களும் இதை வேண்டுமென்றே விவகாரம் ஆக்குவதில் முனைப்பு காட்டுவதை பார்க்கிறோம்
அதிலும் குறிப்பாக ஆன்மீகம் வேடம் அணிந்து கேவலமான விவகாரத்தில் வீடியோ ஆதாரங்களின் மூலம் ஊடகங்களால் இழிவுபடுத்தப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டு அதன் மூலம் இந்த நிமிடம் வரை பதில் சொல்ல இயலாத போலிச்சாமியார் நித்தியானந்த என்பவரின் பீடத்தில் அங்கம் வகிக்கும் மூளைச்சலவை செய்யப்பட்ட சில பெண் துறவிகள்
வரம்பு மீறிய வார்த்தைகளை பயன்படுத்தி ஏதோ கவிஞர் வைரமுத்து பேசியது மாற்று
மதத்தவர்களும் இணைந்து இந்து மதத்திற்க்கு எதிராக செய்யும் சூழ்ச்சி என்பதை போல் ஒரு தோற்றத்தை சமூகவலைதளங்களில் அன்றாடம் பரப்பி வருகின்றனர்
இதை கண்டு கொள்ளாது மவுனமாக இருக்கும் போலிச்சாமியார் நித்தியானந்தா என்பவர் அவர் மீது ஏற்பட்டுள்ள விபச்சார கலங்கத்தை இதன் மூலமாவது மூடி மறைத்து மீண்டும் ஒரு பெரிய
சாமியார் போல் வலம் வரலாம் என்று தப்பாக கணக்கு போட்டுள்ளார்
ஆனால் நித்தியானந்தாவால் மூளைச்சலை செய்யப்பட்ட பெண் துறவிகளின் அநாகரீகமான விமர்சனத்தாலும் போலி சாமியார் நித்தியானந்தாவுக்கு கூடுதலாக அவமானம் தான் ஏற்பட்டு உள்ளதே தவிர இதன் மூலம் ஒரு நன்மையும் அவர் அடையவில்லை
இந்து மதத்தின் ஆண்டாளை கவிஞர் வைரமுத்து மோசமாக பேசியது தான் இவர்களின் கோபத்திற்க்கு கார
ணம் என்பது உண்மையானால்
இந்தியாவில் சில பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கோயில்களின் சிற்பங்களில் பார்த்தாலே முகம் சுழிக்க வைக்கும் ஆபாசமான சிலை வடிவங்களை கோயில்களின் முகப்புகளில் செதுக்கி அதையும் சிலையாக கடவுளாக வழிபடுவது என்பது கடவுளை இழிவு படுத்தும் செயலா? அல்லது கடவுளே காமத்துக்கு அடிமை என்பதை பறை சாற்றும் இழிவு செயலா ?
அசாம் மாநிலம் குவஹாக்கி எனும் பகுதியில் அமைந்துள்ள
காமாக்யா கோயில்
என்ற பெயரில் பெண்ணிண் மர்ம உறுப்பை செதுக்கி வைத்து அதற்க்கு வழிபாடு நடத்துவது இந்து மத கடவுளை இழிவு படுத்தும் செயலா? அல்லது இந்து கடவுளர்ளை கவுரவ படுத்தும் செயலா ?
விமர்சனங்களுக்குரிய வாசல்களை இவர்களே ஆன்மீகத்தின் பெயரால் திறந்து வைத்து கொண்டு யாரும் இவைகளை விமர்சனமே செய்ய கூடாது என்று ஆன்மீக குருமார்கள் எதிர்பார்ப்பது மக்களை புத்தியில்லாதவர்களாக நினைப்பதின் வெளிப்பாடாகும்
ஒன்று ஆன்மீகத்தின் பெயரால் இது போல் அறிவுக்கு முரணாண அல்லது பொதுவாக சொல்லப்படும் விசயங்களுக்கு இந்து மதநூல்களில் இருந்து நேரடியான ஆதாரங்களை காட்டட்டும்
அல்லது விமர்சனங்களுக்கு தர்க்க ரீதியாக பதில் சொல்லட்டும்
இதை தாண்டி வேறு எந்த நடவடிக்கைகளும் இந்து மதத்திற்க்கு கண்ணியத்தை சேர்க்காது
قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَۙ
அவர் கேட்டார்
என்ன, நீங்களாகவே செதுக்கிய பொருள்களையா நீங்கள் பூஜை செய்கிறீர்கள்?
(அல்குர்ஆன் : 37:95)
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا
திண்ணமாக, தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை
இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுகின்றான்
அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள்,
திண்ணமாக பெரும் பொய்யைப் புனைந்தவராவர்மேலும் பாவத்தைப் புரிந்தவராவர்
(அல்குர்ஆன் : 4:48)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment