வழிகேடுகளை விரும்பும் பெண்கள்
F B Live பெண்களின் அவல நிலை
♣♣♦♣♦♣♦♣♣
27-11 -2017 கட்டுரை எண் 1167
-----------------------------
ஆக்கம் . J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
★★-------------------------------★★
டெக்னாலஜி கூடும் போது வழி கேடுகளே அதை அதிகம் அரவணைக்கும் ஆக்கரமிக்கும் என்பதே தற்போதைய சமூகவலை தளத்தின் நடை முறையாகி போனது
சமூகவலை தளமான முகநூலில் தற்போது மெருகு படுத்தப்பட்ட வசதியே FB Live ஆகும்
அதாவது இருக்கும் இடத்தில் இருந்து அதே நிமிடம் சமூகவலை தளமான முகநூலில் அங்கம் வகிக்கும் வேறு நபர்களோடு தனது முகத்தை காட்டி நேரடி வீடியோ காட்சி மூலம் பேசும் வசதியே FB Live எனும் நிகழ்வு
அரசியல் ஆன்மீகம் அரட்டை என்று ஆடவர்களின் பங்களிப்பு FB Live வீடியோவில் ஒரு புறம்
அதே போல் மருத்துவம் கலந்துறையாடல் என்று பெண்களின் நேரடி வீடியோ பங்களிப்பு ஒரு புறம்
இதில் ஆண்கள் பங்கு பெறும் FB Live வீடியோ பின்னூட்ட பதிவுகளில் அவர்களின் ஆண் நண்பர்களின் கலந்துறையாடல் (சாட்டிங்கை)தான் காண முடியும்
ஆனால் பெண்கள் இடம் பெறும் FB Live நிகழ்ச்சியில் அவர்களுக்கே யார் என்று தெரியாத ஆண்களின் பின்னூட்டங்கள் தான் மிகைத்துள்ளது
1-ஹலோ உங்கள் மொபைல் எண் அனுப்புங்கள்
2- எனது மொபைல் எண் இது
3- நீங்கள் அழகாக உள்ளீர்கள்
4-உங்கள் ஊர் என்ன
5- உங்கள் குரலில் நான் மயங்கினேன்
6- உங்கள் வயது என்ன?
என்பன போன்ற கலந்துறையாடலும் ஆபாசமான வர்ணணைகளும் தான் பெண்களின் FB Live நிகழ்வில் ஆக்கரமித்துள்ளது
இதில் முஸ்லிம் பெண்களில் சிலர்கள் ஏதோ அவர்கள் கற்புக்கு அரசிகளை போல் பர்தாக்களை அணிந்து கொண்டும் பாதி முகத்தை துணியால் மறைத்து பாதி முகத்தை மேக்கப் போட்டும் உதட்டு சாயம் பூசிக் கொண்டும் உரையாடுவது சமூகத்தை அவமானப்படுத்தும் செயலாகும்
ஊரை ஏமாற்ற அவர்களின் உடலுக்கு வேண்டாத வெறுப்புடன் பர்தா அணிவதை விட முதலில் அவர்களின் உள்ளத்துக்கு தான் இறையச்சம் எனும் ஒழுக்க பர்தாக்களை மூட வேண்டும்
மறுமை நாளில் ஆடவர்களை விட பெண்கள் தான் அதிகமாக நரகில் இருப்பார்கள் என்ற நபி மொழி எச்சரிக்கைகளை அப்படியே அச்சு பிசகாது உண்மை படுத்தும் சம்பவங்கள் தான் FB Live நிகழ்வில் பெண்கள் இடம் பெறும் காட்சிகள்
இவர்களை பெற்றெடுத்தவர்கள் தான் இவர்களின் வழிகேடுக்கு முதல் காரணமானவர்கள்
அன்றாடம் நாட்டில் நடை பெறும் அவலங்களை தொலைகாட்சி மற்றும் செய்தி தாள்களில் பார்த்தும் கூட படிப்பினை பெறாத இது போன்றோருக்கு பிள்ளை செல்வங்கள் தான் நரகத்தின் சாவிகள்
எல்லையற்ற முறையற்ற சுதந்திரம் தான் படித்த பெண்களையும் சிந்திக்க வைக்காது என்பதற்க்கு இதுவே மிகப்பெரிய சான்று
கவர்ச்சியை காட்டி ஆடவனை ஈர்க்கும் கீழ்த்தரமான சினிமா கூத்தாடிகளின் அடிமை பெண்கள் இருக்கும் வரை மனித சமுதாயத்தில் ஆடவர்கள் அயோக்கியர்களாக மட்டுமே வலம் வருவார்கள்
திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை வாலிபன் கற்பழித்து விட்டான் என்று ஆடவனை மட்டும் குற்றம் சொல்லும் உலகம் அவன் கற்பழிக்கும் அளவு அவனது மனதை உளவியல் ரீதியாக வழிகெடுத்த பெண்ணை மட்டும் ஏதோ அப்பாவிகளை போல் சித்தரிப்பது சமூகத்தின் தந்திரமாகி விட்டது
இது அயோக்கிய ஆடவர்களுக்கு ஆதரவு தெரிவித்து எழுதிய பதிவு அல்ல
மாறாக ஆடவர்களின் ஒழுக்கம் கெட்ட நடவடிக்கைகளுக்கு சுதந்திரத்தின் பெயரால் சீரழியும் பெண்களே தூபம் போடுபவர்கள் என்பதே இந்த பதிவின் நோக்கம்
நட்புடன் J . இம்தாதி
***************************
5287 நூல் புகாரி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் சொர்க்கத்தை எட்டிப்பார்த்தேன் அங்கு வசிப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன்
நரகத்தையும் எட்டிப்பார்த்தேன் அதில் வசிப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
**************
உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்கள் அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர் அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும்
( அதாவது அந்நிய ஆடவர்களை ஈர்க்கும் விதம் தன்னை வெளிப்படுத்தி காட்டுபவர்கள் )
இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள் அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள் இப்னு உமர் ரலி நூல் (முஸ்லிம்) !!
முற்றும் !!
Comments
Post a Comment