கடவுள் அறிவா அறிவியலா

            இறைநம்பிக்கைக்கு
      உறுதுணையாக இருப்பது
            அறிவா  அறிவியலா  ?
                 ********************
             கட்டுரை எண் 1597
                      -----------------

நெருப்பு சுடும் என்பது
அறிவுக்கு தெரியும் 

நெருப்பு ஏன் சுடுகிறது?
வெப்பம் எவ்வாறு உருவாகிறது? என்று ஆராய்ந்து விளக்கும்  ஆற்றல் கொண்டதே நிரூபிக்கப்பட்ட அறிவியல்

அறிவியல் என்பதும் அறிவின்
ஒரு பகுதி

ஆனால் மனிதனின் அறிவு என்பது அறிவியலைவிடப் பரந்தது

அறிவியலின் பிறப்பை விட
அறிவின் பிறப்பே காலம் கடந்தது

எனவே அறிவியலால் விளக்க முடியாத ஒன்றை 
அறவே இல்லை என்ற அறிவுள்ளவன் முடிவு செய்யக்கூடாது

கடவுள் இல்லை என்றும்
அறிவியல் சொல்லாது
கடவுள் இருக்கிறான் என்றும்
அறிவியல் சொல்லாது

முறையான தூய்மையான
கடவுள் நம்பிக்கை
மனிதனின்  வாழ்வியலை  பக்குவப்படுத்துகிறதா ?
அல்லது மனிதனை  தரம் கெட்டவனாக மாற்றி வருகிறதா ? என்பதை  மனிதனின்
அறிவே நடைமுறை ஒப்பாய்வு செய்து தெளிவாக முடிவெடுக்கும்

أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ ۝ أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۚ بَل لَّا يُوقِنُونَ

எந்தப் பொருளுமின்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா?
அல்லது அவர்களே தங்களைப் படைத்துக் கொண்டார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் அவர்களே படைத்தார்களா?
மாறாக அவர்கள் உறுதியாக நம்புவதில்லை

அல்குர்ஆன் 52:35–36

இறைவன் இணையற்றவன்
வல்லமைக்கு உரியவன்
நினைத்ததை படைப்பவன்
படைப்புகளின் பலவீனத்திற்கு அப்பாற்பட்டவன்
என்றும் இருப்பவன்
இணைதுணை இல்லாதவன்
இடைத்தரகர்களை விரும்பாதவன்
ஒழுக்க வாழ்வை போதிப்பவன்
பாவிகளை ஒரு நாள் தண்டிப்பவன்
நல்லோர்களை ஒரு நாள் முழுமையாக அரவணைப்பவன்

இந்த தகுதிகளுடன் இறைவனை ஒரு மனிதன் நம்புவதால் அவனுக்கு ஏற்படும் கெடுதல் என்ன
அவனால் பிறருக்கு ஏற்படும் கெடுதல் என்ன
என்பதற்கு முறையான பதிலை நாத்தீகர்களால் வாதம் எடுத்து வைக்க முடியுமா  ?

இல்லாத இறைவனை நம்புவதால் மனிதனுக்கு எப்போதும் பாதிப்பு ஏற்படப்போவதும் இல்லை
ஒரு வேளை இருக்கின்ற இறைவனை மறுத்து
இறைவனின் சன்னதியில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்போது மனிதனால் எப்படி இறைவனின் பிடியில் இருந்து தப்பிக்க இயலும்
என்பதை தனிமையில் சிந்தித்தாலே பகுத்தறிவுள்ள எவரும் இறைவனை மறுக்கும் கொள்கையை நியாயப்படுத்த துணியமாட்டார்கள்

நான் தந்தையின்றி பிறந்தேன் என்பதும் அறிவீனம்
நான் பல தந்தைக்கு பிறந்தேன்
என்பதும் அறிவீனம்
நான் ஒரு தந்தைக்கே பிறந்தேன் என்பதே அறிவார்த்தம்
அறிவியலுக்கு முரணில்லாத முடிவாகும்

ஆனால் இந்த தீர்க்கமான முடிவையும் அறிவியல் கற்றுத்தராது

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏
(இறைத்தூதரே ) நீர் கூறுவீராக
அல்லாஹ் ( இறைவன்)
அவன் ஒருவனே

اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
அல்லாஹ் (இறைவன் எவரிடத்திலும் ) தேவையற்றவன்

لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏

அவன் (இறைவன் எவரையும்) பெறவுமில்லை
(எவராலும்) பெறப்படவுமில்லை

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
அவனுக்கு நிகராக எவரும் இல்லை

(அல்குர்ஆன் : 112:1,2,3,4)

      நட்புடன் J . யாஸீன் இம்தாதி
                         22-11-26
              
         




Comments

Popular posts from this blog

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்

சேரமான் மஸ்ஜித்

சுபுஹான மவ்லீத்