யாசகம் கேட்காதீர்

     யாசகம் கேட்பதை தவிர்ப்பீர்
               **********************
                  கட்டுரை 1528
                       ***********

மக்களிடம் கையேந்துவதையே தொழிலாக வைத்திருப்போர்  
தனது வாழ்வில் கூட தன்னிறைவுடன் 
வாழ மாட்டார்கள் 

காரணம் எப்போதும் தன்னை 
ஏழை என்று காட்டிக்கொள்வதில் கவனம் செலுத்துவார்கள் 
அதற்காக அணியும் ஆடையை கிழிந்த நிலையில் அணிந்து கொள்வார்கள் 
தனது உடலுக்கு ஆரோக்யமான உணவை பணம் கொடுத்து வாங்கி சாப்பிட மாட்டார்கள்
தன்னைச்சார்ந்தவருக்கும் 
உதவ முன் வர மாட்டார்கள் 
பிறரிடம் கையேந்தி சேமிக்கும் பணத்தை யாரும் அறியாது மறைத்து வைப்பார்கள் 

அவர்கள் சிரமப்பட்டு பிறரிடம் கையேந்தி சேமித்த பணம் அவர்களின் வாழ்வுக்கும் உதவாது 
அவர்களை சார்ந்தோருக்கும் உதவாது 

அதனால் தான் தானதர்மம் செய்வதை சிறப்பித்து சொல்லும் இஸ்லாம் தர்மம் பெறுவதை சிறப்பித்து சொல்லவில்லை 

உழைக்காமல் பெறும் பணத்தை நரகத்தின்
 தீ கங்காக எச்சரிக்கை செய்கிறது 

உடல் ஆரோக்யம் உள்ளவர்கள் மக்களின் பணத்தை பெறுவதற்கு தங்களை ஊனமானவர்களாக  காட்டிக்கொள்வது 
கைக்குழந்தைகளுக்கு போதை மருந்தை கொடுத்து உறங்க வைத்து பசியால் மயங்கி இருப்பதாக காட்டும் விதமாக எந்நேரமும் இடுப்பில் தூக்கி கொண்டு  சுற்றுவது 
தங்களை ஊமையர்களாக காட்டிக்கொள்ள  நோயாளிகளாக ஆப்ரேசன் செய்ய வழியில்லாதவர்களாக காட்டி ஏதோ ஒரு அமைப்பு அவர்களுக்கு உதவி செய்ய பரிந்துரைப்பதாக  பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு
பேரூந்துகளில் பயணிக்கும் மக்களின் மடியில் வைத்து விட்டு சற்று நேரம் பொருத்து 
வசூல் செய்வது 
இப்படி பல ஏமாற்று வேலைகளை செய்வோர் பெருகி விட்டனர்  

கையேந்தும் பழக்கத்தை  வழக்கமாக்கிக்கொண்டால் அவர்கள் தங்களது சுயமரியாதையை விரைவில் இழந்து விடுவார்கள் என்பதற்கு இதுவே சான்று 

"يَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى

மேல் கை (கொடுப்பது) 
கீழ் கையைக் (பிச்சை கேட்பது) விட சிறந்தது

(புகாரி, ஹதீஸ்: 1429; முஸ்லிம், ஹதீஸ்: 1033)


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ:
قَالَ النَّبِيُّ ﷺ:
«مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ، حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ، وَلَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ»

(சஹீஹ் புகாரி – ஹதீஸ்: 1474, சஹீஹ் முஸ்லிம் – ஹதீஸ்: 1040)


قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
«مَن سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا، فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا، فَلْيَسْتَقِلَّ أَوْ لِيَسْتَكْثِرْ»
யார் மக்களிடம் செல்வத்தை அதிகப்படுத்திக் கொள்ளவே கேட்கிறாரோ
அவர் உண்மையில் தீப்பொருட்களை (நெருப்பை) கேட்கிறார்
அவர் விரும்பினால் குறைவாக எடுத்துக்கொள்ளட்டும்
அல்லது அதிகமாக எடுத்துக்கொள்ளட்டும்


(சஹீஹ் முஸ்லிம், ஹதீஸ்: 1041)

      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                        02 -11-2025

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்