நல்லடியார்கள் மகான்கள்
நல்லடியார்கள் மகான்கள்
************************
கட்டுரை எண் 1524
*******************
மகான்களிடம் நேரடியாக துஆ செய்வதும்
அல்லது அவர்களின் பொருட்டால் துஆ செய்வதுமே மகான்களை மதிக்கும் முறையாகும் என்றால்
நபி ஆதம் (அலை) அவர்களுக்கு பின்னால் வந்த
நபி முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை
எந்த இறைத்தூதரும் அவ்வாறே பிரார்த்தனை செய்ய கற்றுக்கொடுத்திருப்பார்கள்
ஆனால் எந்த நபியும் பிரார்த்தனை செய்யும் பொழுது மகானின் பொருட்டாகவோ அல்லது நேரடியாகவோ அழைத்து பிரார்த்தனை செய்ததாக ஆதாரப்பூர்வமான ஒரு சான்றும் இல்லை
திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்றிலும் கூட அவ்வாறான வழிகாட்டல்கள் அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ உத்தரவுகள் இல்லை
மகான்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது அனுமதிக்கப்பட்டது என்றால்
இறந்து அடக்கம் செய்யப்பட்டவர்களே மகான்கள் என்று மகான்களின் இலக்கணத்தை சுருக்கியது யார் ?
உலகில் வாழும் மனிதர்களில் ஒருவர் கூட மகானின் அந்தஸ்த்தை பெறவில்லை என்று முத்திரை குத்த விரும்புகிறார்களா ?
மகான்கள் மூலமாக கையேந்தி பிரார்த்தனை செய்வது கூடும் என்போர் ஏன் உயிருடன் இருக்கும்
ஒரு மகானிடமும் கையேந்துவது இல்லை
உயிருடன் வாழும் போது ஒருவரை மகான் என்று
அறிய முடியாதவர்கள் இறந்து மண்ணில் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரை எந்த அளவுகோல் மூலம் மகான் என்று முடிவு செய்தார்கள் ?
மகான்களிடம் நேரடியாகவோ அல்லது பொருட்டாகவோ துஆ செய்யவில்லை எனில் அந்த பிரார்த்தனையை ஏற்க மாட்டேன் என்றோ அல்லது ஏற்க்கப்படும் தகுதி குறைவு என்றோ குறிப்பிடும் இறைவசனம்
அல்லது நபிமொழி எது ?
மகான்கள் மூலமாக துஆ செய்வதே அவர்களை மதிப்பது என்றால் இறந்து போன நல்லடியார்களுக்காக உயிருடன் வாழும் மக்களை துஆ செய்யுமாறு குர்ஆனின் வசனம் வழிகாட்டுவது ஏன் ?
இக்கேள்விகளில் ஒன்றுக்கும் கூட ஆதாரப்பூர்வமான பதிலை சொல்ல முன்வராதவர்கள்
இறந்து போனவர்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வதை சுன்னத் என்று போதிப்பது மடமையின் உச்சம்
ஒரு மனிதர் நல்லடியாராக வாழ்வது அவரது மறுமை வெற்றிக்கே தவிர
அவர் மூலம் பிறர் ஆதாயம் அடைவதற்கு அல்ல
நல்லடியார் என்பது ஒரு இனம் சார்ந்த தகுதியல்ல
மாறாக ஒவ்வொரு முஸ்லிமும் நல்லடியாராக மாற வேண்டும் என்ற அறிவுரை சார்ந்ததே
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
13-10-2025
Comments
Post a Comment