பறவை தரும் பாடம்
பறவை தரும் வாழ்க்கை பாடம்
***********************
எங்கு வேண்டுமானாலும்
கூடு கட்டலாம்
பல எண்ணிக்கையிலும்
கூடு கட்டலாம்
என்ற சுதந்திரம் இருந்தும்
எந்த பறவைகளும்
பல கூடு கட்டுவதும் இல்லை
பிற பறவைகளின் கூடுகளுக்கு
உரிமை கொண்டாடுவதும் இல்லை
அபகரிப்பதும் இல்லை
காரணம்
தேவைகளுக்கு ஏற்றே
ஆசை கொள்ள வேண்டும் என்பது
பறவைகள் தரும் படிப்பினை
எந்த நாடு வேண்டுமானாலும்
சுற்றித்திரியலாம்
எந்த பறவையுடன் பொழுதை கட்டுப்பாடும்
இன்றி கழிக்கலாம்
என்ற தடையுமில்லாது
தன்னைச்சார்ந்த பறவையுடன்
மட்டுமே சுற்றித்திரியும்
காரணம்
தன்னை சார்ந்து வாழும் குடும்பத்தின் கண்காணிப்பும் பாதுகாப்புமே தனது கடமை என்ற உணர்ச்சியாகும்
ஐந்தறிவு கொண்ட பறவைகளிடம்
ஆறரிவு கொண்ட மனித சமூகம்
வாழ்க்கை பாடம் பயில வேண்டும்
தன்னை நம்பியுள்ள குடும்பத்தை மறந்து
அல்லது ஒதுக்கியும் வாழும் கீழ்நிலை குணத்தை கலைய வேண்டும்
அலைபாயும் ஆசைகளை புறம் தள்ளி
தேவைகளை கருத்தில் கொண்டே
மனதை கட்டுப்படுத்திக்கொள்ளும் தன்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்
وَمَا مِنْ دَآبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤٮِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّاۤ اُمَمٌ اَمْثَالُـكُمْ مَا فَرَّطْنَا فِى الْـكِتٰبِ
مِنْ شَىْءٍ ثُمَّ اِلٰى رَبِّهِمْ يُحْشَرُوْنَ
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும் தனது இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை
(இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை
இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்
(அல்குர்ஆன் : 6:38)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
11-10-2025
Comments
Post a Comment