தராசின் கல்லா முள்ளா

          நீங்கள் தராசின் கல்லா 
         அல்லது தராசின் முள்ளா 
                  ******************
               கட்டுரை எண்  1519
                     *************

மார்க்கத்தின் மீதுள்ள  பற்று முஸ்லிமின் உள்ளத்தில்  எந்தளவுக்கு ஆழமாக பதிவாயிருக்குதோ அந்தளவுக்கே அவன் நேர்வழியில் பயணிப்பான் 

அதே போல் ஒரு அறிஞர்  மீதும்  அல்லது இயக்கத்தின் மீதும் குருட்டு பக்தியும் அல்லது  வெறுப்பும் எந்தளவுக்கு ஆழமாக பதிவாயிருக்குதோ அந்தளவுக்கு அவனிடம் அறியாமையும் முரண்பாடும் விரக்தியும் உளரல்களும் புலம்பல்களும் 
குடி கொண்டிருக்கும்

இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் எவரும் இருக்க முடியாது 

சமூகவலைத்தளத்தில் பதிவிடும் பலரும் உலமாக்களில் சிலரும்  இந்நிலையில் இருப்பதை பல வருடங்களாக அனுபவத்தில் பார்த்து வருகிறோம் 

இயக்கத்தை கடுமையாக சாடுபவர்களும் 
அல்லது தனிப்பட்ட அறிஞரை கடுமையாக விமர்சிப்பவர்களும் நிச்சயமாக சில வருடங்களுக்கு முன் அவர்கள் விமர்சிக்கும் இயக்கத்தில் அல்லது அறிஞர் மீது குருட்டுத்தனமாக பக்தியை நிச்சயம் வைத்திருந்திருப்பார்கள் 

அவர்களின் அவசியமற்ற செயல்பாடுகளுக்கும் மூடர்களை போல் முட்டு கொடுத்திருப்பார்கள் 

அதன் பின் ஒவ்வொரு இயக்கமாக பின் தொடர்ந்து இறுதியில் விரக்தியில் தள்ளப்பட்டிருப்பார்கள் 

இத்தகையவர்களே வரம்பு மீறி அறிக்கை போடுவதையும் தங்களை பரிசுத்த  தூயவான்களாக காட்டிக்கொள்வதையும் இயக்கம் சார்ந்து நடுநிலையோடு  இருப்பவர்களை இஸ்லாத்தின் விரோதிகள் போல் சித்தரிப்பதையும் காண முடியும் 

இவர்களின் அறிக்கைகளை காணும் பொழுது தனிமையில் பல முறை நகைப்பாக சிரித்துள்ளேன் 


ஏகத்துவ சிந்தனையில் நுழைந்தது முதல் இன்று வரை அனுபவத்தில் கண்ட நிகழ்வுகளையே இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன் 


திருமறை குர்ஆனும் சுன்னாவும் இதயத்தில் முதலிடம் இருக்கும் வரை எதையும் எளிதாக இனம் காண முடியும்

திருமறை குர்ஆனும் சுன்னாவும் இதயத்தில் முதலிடம் இருக்கும் வரை எவருடைய மதிப்பையும் குறைக்கவும் மாட்டோம் குருட்டு பக்தியில் கொள்கை  பிறழவும் மாட்டோம் 

கூட்டு முறையில் இணைந்து பயணிப்பதும் 
இயக்கம் சார்ந்த நற்பணிகளில் பங்கெடுப்பதும் நன்மைக்குரிய காரியமே 

ஆனால் மறுமையின் வெற்றிக்கு நமது தூய நம்பிக்கையும் அதற்கு ஏற்ற செயல்பாடுகளுமே கைகொடுக்கும் என்பதை மட்டும் ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டும் 

தராசின் மீது வைக்கப்படும் எடைக்கல்லாக இருப்பதை விட தராசின் மேலுள்ள முள்ளாக இருப்பதே  சாலச்சிறந்தது 


நீங்கள் கல்லாக இருக்க விரும்புகிறீர்களா  ?
அல்லது நேர்முனை காட்டும் முள்ளாக இருக்க விரும்புகிறீர்களா ?

1995 முதல் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் 
மக்கள் முன் மேடை பேச்சில் தொடர்ந்து நினைவூட்டிய  செய்திகள் தானே தவிர இந்த தகவல் 2025 ஆண்டு புதிதாக எழுதிய கட்டுரை அல்ல


فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا‏

உன் இறைவன் மேல் சத்தியமாக அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உன்னை  நீதிபதியாக ஏற்று  பின்னர் நீங்கள் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் 
தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையிலும் அவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக  ஆகமாட்டார்கள்

(அல்குர்ஆன் : 4:65)



        நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                            1-8-2025

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்