தர்மசீலர்களை குறைத்து மதிப்பிடாதீர்
தர்மசீலர்களை உதாசீதனம்
செய்யாதீர்
**********************
கட்டுரை எண் 1512
*************
ரமலான் மாதத்தை முன்னிட்டு நன்மையை நாடி பகிரப்படும் தர்ம பொருட்களை பெறும் சிலர்
அதை வாங்கும் போது மலர்ந்த முகத்துடனும்
தர்மம் கொடுப்பவர் திரும்பிய பின் கொடுக்கப்பட்ட தர்மப்பொருளை அர்ப்பமாக பேசுவதையும் பரவலாக காண முடிகிறது
பிறர் நலனில் அக்கரை கொண்டு கோரிக்கை வைக்காமலே தர்மம் கொடுப்பவர்களின் மனதை காயப்படுத்துவது நன்றி கெட்ட செயலாகும்
500 ரூபாய் மதிப்புள்ள தர்மப்பொருளை மனமுவந்து கொடுப்பவர்களை ஏளனமாக பேசுபவர்கள் அவர்களை போல் வாழ்நாளில் என்றாவது நாம் மனம் விரும்பி தர்மம் செய்துள்ளோமா என்று தனிமையில் சிந்திக்க வேண்டும்
தர்மம் செய்பவர்களின் எண்ணத்தை காண வேண்டுமே தவிர அவர்கள் தரும் பொருளின் மதிப்பை எடை போடக்கூடாது
காரணம் பேரீத்தம்பழம் துண்டு அளவு தர்மம் செய்பவர் கூட அதன் மூலம் மறுமையில் சுவனத்தை அடையும் சூழல்கள் ஏராளம் உண்டு என்று
நபிமொழி பேசுகிறது
ஆடு கால்களின் குளம்பை வைத்து சமைத்து
தர்மம் செய்தாலும் அதை கூட மட்டமாக கருதக்கூடாது என்றும் நபிமொழி அறிவுருத்துகிறது
விரும்பினால் தர்மத்தை பெறலாம்
அல்லது தர்மத்தின் தேவை தற்போது எனக்கு இல்லை என்று சமாதானம் கூறி திருப்பி அனுப்பி விடலாம்
இதை தர்மம் பெறுபவர்கள்
உணர வேண்டும்
வருமானத்தில் அதிகபட்ச தொகையை
தர்மம் செய்பவர்களும்
பிறர் அறியாது தாராளமாக
தர்மம் செய்பவர்களும்
விளம்பரத்தை விரும்பாது
தர்மம் செய்பவர்களும்
குறைந்த வருமானத்தில் இயன்றதை
தர்மம் செய்பவர்களும்
சமூகத்தில் ஏராளம் உள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது
தர்மம் செய்வதை வலியுருத்தும் இஸ்லாம்
அதன் சிறப்புகளை பட்டியலிடுவது போல்
தர்மம் பெறுவதை சிறப்பு என்று குறிப்பிடும்
ஒரு ஹதீசும் இடம் பெறவில்லை என்பதை
மனிதனின் சுயமரியாதைக்கு இஸ்லாம் கொடுத்துள்ள சிறப்பாக நான் கருதுகிறேன்
தர்மம் பெறுவது இழிவான செயல் அல்ல
மாறாக தர்மம் கொடுப்பதை இஸ்லாம் வலியுருத்துகிறது எனில் அதை உரியவர்கள் பெறுவதும் அனுமதிக்கப்பட்ட செயலேயாகும்
ஆனால் தர்மம் தேடி அலைவது சிறந்த செயல் அல்ல என்பதை நினைவில் வைக்க வேண்டும்
اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِيَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَؔ
யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில்) இரவிலும் பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் கூலி இருக்கிறது அவர்களுக்கு அச்சமும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
(அல்குர்ஆன் : 2:274)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
18-3-2025
Comments
Post a Comment