படையல் பொருளை உண்ணலாமா
படையல் பொருள்களை
முஸ்லிம்கள் அணுகும் முறையும்
தற்போதைய நிலையும்
**********************
ஆய்வுக்கட்டுரை
பாகம் இரண்டு
***********
இறைவன் ஹலால் ஆக்கிய பொருட்களும்
உணவு வகைகளும் முறையாக கைவசம் வந்தால்
அதை பயன்படுத்தலாம் சாப்பிடலாம் என்பதற்கு பெரிய ஆய்வு தேவை இல்லை
காரணம் இறைவன் ஹலால் ஆக்கிய ஒன்றும்
ஹராம் ஆக்கிய ஒன்றும் முஸ்லிமின் வாழ்வில் நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர எப்போதும் அதன் தன்னிலை சட்டத்தை இழக்காது
ஆனால் இறைவன் அனுமதித்த பொருளும் உணவுகளும் இறைவன் அனுமதிக்காத ஒரு செயலை அரங்கேற்றுவதின் மூலம் கைவசம் வந்தால் மார்க்கத்திற்கு முரணாக நடைபெறும் காரியத்தை மையமாக வைத்து அவைகள் வழங்கப்படுவதால் இறைதிருப்தி இல்லாத அக்காரியத்தின் மூலம் வழங்கப்படும் உணவுப்பொருளை தவிர்த்து கொள்வது ஈமானின் இறுதி நிலையாகவும் சிறந்ததாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை
******************
தீமையில் பங்கெடுப்பதைத் தவிர்ப்பதற்காக இப்ராஹீம் (அலை) அவர்கள் நோயுற்றிருப்பதாக பொய் கூறி சமாளித்தார் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது
فَقَالَ اِنِّىْ سَقِيْمٌ
"நிச்சயமாக நான் நோயாளியாக இருக்கிறேன்" என்றும் கூறினார்.
فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِيْنَ
எனவே( காபிர்கள் தனது செயலுக்கு அவரை ( அழைப்பதை ) விட்டும் அவருடைய சமூகத்தவர்கள் திரும்பிச் சென்றனர்
(அல்குர்ஆன் : 37:89,90)
صحيح مسلم
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ – وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ – قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ.
உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால்
அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்
முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்)
அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்)
இது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்
அறிவிப்பவர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம்
*****************
வரதட்சணை வாங்கி வழங்கப்படும் விருந்தை புறக்கணிப்பதும் கத்னா விழா என்ற பெயரில் வழங்கப்படும் விருந்தை புறக்கணிப்பதும்
அந்த உணவு ஹராம் என்பதற்காக அல்ல
மாறாக அக்காரியம் மார்க்கம் அங்கீகரிக்காத ஒன்றுக்காக வழங்கப்படும் விருந்தாக அமைந்துள்ளது என்பதாலே தவிர்க்கிறோம்
அவ்வகையில் இறைவன் அல்லாதவர்களுக்காக( இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்படாத கால்நடைகள் தவிர்த்து ) படையல் செய்து தரப்படும் ஹலாலான உணவுகளை தவிர்ப்பதும் பேணுதலாகும்
பிறமதம் சார்ந்தவர்கள் படையல் செய்து தரும் உணவுகளும் பித்அத்தான காரியங்கள் மூலம் தப்ரூக் (.பரகத்) எனும் பெயரில் வழங்கப்படும் நேர்ச்சை சாப்பாடு போன்றவைகளும் உள்ளடக்கமாகும்
இறைவன் கடுமையாக வெறுக்ககூடிய சிர்க் என்ற இணைவைத்தல் ( படையல்) மூலம் வழங்கப்படும் ஹலாலான உணவுகளையும் ஈமானின் இறுதி நிலையை கடைபிடித்து வெறுத்து ஒதுக்குவது இதில் முதலிடம் வகிக்கும்
இது போன்ற விசயங்களில் மென்மையான போக்கை கடைபிடிக்க துவங்கினால் நாளடைவில் மார்க்கத்திற்கு விரோதமாக நடைபெறும் அனைத்து காரியங்கள் மூலம் வழங்கப்படும் உணவுகளையும் சாதாரணமாக உண்ணத் துவங்குவார்கள்
ஹலால் என்பதால் ஈமானின் இறுதி நிலையை கூட கைவிடும் வழக்கம் எளிதாக தொற்றிக்கொள்ளும்
உணவு உடை உறைவிடம் எனும் தலைப்பில்
ஆலிம் பீ . ஜைனுல் ஆப்தீன் அவர்கள் மேற்கோள் காட்டிய
وروى ابن أبي شيبة عن أبي برزة رضي الله عنه: أنه كان له سكان مجوس، فكانوا يهدون له في النيروز والمهرجان، فكان يقول لأهله: ما كان من فاكهة فكلوه، وما كان من غير ذلك فردوه
قال شيخ الإسلام ابن تيمية رحمه الله بعد ذكر الآثار عن الصحابة: «فهذا كله يدل على أنه لا تأثير للعيد في المنع من قبول هديتهم، بل حكمها في العيد وغيره سواء، لأنه ليس في ذلك إعانة لهم على شعائر كفرهم»
அபீபர்ஜா (ரலி )அவர்கள் கூற்றிலும்
இறைவன் அல்லாதவர்களுக்காக பலியிடப்படும் இறைச்சி வகைகளை தவிர்த்து இதர உணவு வகைகளை வழங்கினால் சாப்பிடலாம் என்ற செய்தியிலும் பூஜிக்கப்பட்டு வழங்கப்படும் தாவர வகைகளை உண்ணுங்கள் என்று நேரடியாக வாசகம் இல்லை
மேலும் அந்த செய்த நபியவர்களுடன் தொடர்புடைய ஹதீசாகவும் இல்லை
மாறாக அபீபர்ஜா ( ரலி ) அவர்கள் தனது குடும்பத்தாருக்கு அனுமதித்த செயலாக மட்டும்
இடம் பெற்றுள்ளது
அபீபர்ஜா (ரலி ) அவர்கள் தனது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கிய உணவுப்பொருள் படையல் உணவாகவும் இருக்கலாம்
அல்லது படையல் செய்யப்படாத நெருப்பி வணங்கிகள் அந்நாளில் தந்த விருந்து அல்லது அன்பளிப்பு பொருளாகவும் இருக்கலாம்
இதை வைத்து அபீபர்ஜா (ரலி) பூஜிக்கப்பட்ட உணவுப்பொருளை பயன்படுத்த சொன்னார்கள் என்றும் எடுத்துக்கொள்ள இயலாது
மேலும் அபீபர்ஜா ( ரலி) அவர்கள் தனது குடும்பத்தாருக்கு உபதேசித்த இச்செய்தியை ஆதாரமாக வைத்து படையல் செய்யப்பட்ட பொருளாக இருப்பினும் பரவாயில்லை
உண்ணுங்கள் என்று பொது அனுமதியை
புரிந்து கொள்ள முடியாது
மேலும் இக்கருத்தை ஒட்டி பீ. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் தர்க்கரீயாக கூறிய கூடுதலான மேற்கோள்கள் அனைத்தும் நேரடியாக படையல் செய்யப்பட்ட தாவர வகைகள் ஹலால் என்பதற்குரிய ஆதாரங்களாக ஆகாது
பூமி பூஜை
வாகன பூஜை
விவசாய பூஜை
அனைத்தும் சாப்பிடும் உணவு வகையை சார்ந்தாகவும் விநியோகம் செய்யும் உணவாகவும் இல்லை
மாறாக அச்செயல்கள் ஒவ்வொரு மதத்தவர்களின் நம்பிக்கையை சார்ந்ததாகும்
அவற்றை முன்னிட்டு சிலைகளுக்கு படையல் செய்யும் குறிப்பிட்ட உணவுப்பொருட்களை முஸ்லிம்களுக்கு அவர்கள் கொடுப்பதும் இல்லை
சுருக்கமாக சொன்னால் சினிமா திரையறங்கம் கட்டி அதன் திறப்பு விழாவை முன்னிட்டு ஹலாலான உணவுகளை கொண்டு விருந்தளிக்க ஒருவர் அழைத்தால் ஆபாசத்தை அரங்கேற்றம் செய்யும் சினிமாக்களை எதிர்ப்பேன் ஆனால் தியேட்டர் திறப்பு விழாவை முன்னிட்டு அழைக்கப்படும் ஹலாலான விருந்தில் மட்டும் கலந்து கொள்வேன் என்று ஈமான் நிறைந்த எந்த முஸ்லிமும் பங்கு கொள்ளவும் மாட்டான் பங்கு கொள்ளவும் கூடாது
பங்கு கொள்ளாது இருப்பதே ஈமானை தற்காத்து கொள்ளும் செயலாகும்
இப்பதிவு தனிப்பட்ட நிலையில்
இதர ஆதாரங்களின் துணையுடன்
நான் சுயஆய்வு செய்து வழங்கிய முதற்கட்ட முடிவே
இப்பதில் இயக்கத்தையும் பிற அறிஞர்களையும் இணைத்து முடிச்சிட வேண்டாம்
இப்பதிவின் மூலம் குறிப்பிட விரும்பும் கருத்து
1 - படையல் செய்யப்பட்ட பொருட்கள் எதுவாக இருப்பினும் ஒரு முஸ்லிம் தவிர்ந்து கொள்வதே ஈமானின் இறுதி நிலை
2 - ஆதாரங்களின் மூலம் அனுமதி என்று முடிவாகினும் இஸ்லாம் அனுமதித்தவைகளை எல்லாம் பயன்படுத்தியே தீர வேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை
தர்மம் பெறுவது இஸ்லாம் அனுமதித்த செயலாக இருப்பினும்
தர்மத்தை தேடி அலையாது இருப்பதும் வறுமையிலும் இயன்றதை
தர்மம் செய்வதுமே இஸ்லாம் விரும்பும் செயலாகும்
****************************
ஆலிம் பீ. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் மேற்கோள் காட்டி பேசிய கீழ்காணும் திருக்குர்ஆன் 5.3 வசனத்தில் இடம் பெற்ற வமா உஹில்ல லிகைரில்லா என்ற வார்த்தைகளுக்கு கூடுதலான தெளிவும் தகவலும் தேடிக்கொண்டிருப்பதால் அதை பற்றிய விரிவுரையை இதில் தற்போது பதிக்கவில்லை
இன்ஷா அல்லாஹ் நிதானமாக அதை பதிப்போம்
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ
(தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்டதும்
************************
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
17-3-2025
Comments
Post a Comment