அழைப்புப்பணி
எது ஆழமான அழைப்புப்பணி
************************
கட்டுரை எண் 1511
*************
அழகிய உபதேசங்களாலும்
அறிவுப்பூர்வமான வாதங்களாலும்
ஆதாரப்பூர்வமான சான்றுகளோடும்
நடைமுறை செயல்களுடன்
இஸ்லாத்தின் உண்மைகளை
எடுத்து வைக்கும் வழிமுறையை விட
வேறு எந்த வழிமுறைகளும் மனிதனின் மனதை சத்தியத்தின் பக்கம் இயல்பாக திருப்பாது
உலகம் தோன்றியது முதல்
நபிமார்கள் நல்லோர்கள் வரை நடைமுறை படுத்தி வந்த அழைப்புப்பணியின் வடிவமும் இதுவே
ரீல்ஸ் வீடியோக்கள் மூலம்
நடிப்பு திறமைகளின் மூலம்
நாடக வடிவத்தின் மூலம்
மார்க்க பிரச்சாரம் செய்வது எதார்த்தமான அழைப்புப்பணியின் அழுத்தத்தை உருவாக்காது
காரணம் இந்த வழிமுறைகளை நடிகர்களே உங்களை விட அதிகமாக மெருகூட்டி மக்கள் கண்களுக்கு காட்ட இயலும்
தனி மனிதனை சந்தித்து
ஐந்து நிமிடம் அக்கரையுடன் எடுத்து வைக்கும் இஸ்லாமிய அழைப்புப்பணியின் ஆத்மார்த்தமான உணர்வை வேறு எதிலும் பெற இயலாது
யாரோ ஓதி வைத்து சென்ற திருக்குர்ஆன் குரலுக்கு ஏற்று
வாய் அசைப்பது
தீயவைகளை எதிர்ப்பது போல் கேமராவுக்கு முன்னிருந்து
உடல் அசைவுகளை வெளிப்படுத்துவது
விளைவுகளை பதிவாக்கியிருக்கும் வீடியோ பதிவுகளுக்கு பின்னனியில் கதறுவது போல் ஓலமிடுவது
இவை யாவும் சினிமா காட்சிகளில் வழமையாக பார்த்து பழக்கப்பட்ட மக்களின் நடைமுறைகளே
பதிவாக்கப்பட்ட இஸ்லாமிய ஆன்லைன் பதிவுகளே அழைப்புப்பணிக்கு போதும் எனில் இனி புதிதாக எவரும் நிகழ்சிகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை
காரணம் அனைத்து தலைப்புகளிலும்
பல தரப்பட்ட உரைகள் விவாதங்கள் கருத்தரங்குகள் பல மொழிகளில்
பல அறிஞர்கள் ஆய்வாளர்கள் சிந்தனையாளர்கள் மூலம்
ஆடியோ வீடியோ கட்டுரைகள் மூலமாக கோடிக்கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் அழைப்புப்பணியை மட்டும் முதன்மை அழைப்புப்பணியாக கருதாதீர்
அது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் வழிமுறையாகும்
اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ
(நபியே!) உனது இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக
அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக
மெய்யாக உன் இறைவன்
அவன் வழியைவிட்டு தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்
(அல்குர்ஆன் : 16:125)
اَ لَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் ( நஷ்டவாளிகள்)
(அல்குர்ஆன் : 18:104)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
20-2-2025
Comments
Post a Comment