படிப்பறிவும் பகுத்தறிவும்
பகுத்தறிவும் படிப்பறிவும்
*******************
கட்டுரை எண் 1510
************
படித்தவனாக இருந்தால்
இப்படி செய்வாயா ?
படித்தவனாக இருந்தால்
இப்படி பேசுவாயா ?
படித்தவனாக இருந்தால்
கண்ணியம் இழந்து நடப்பாயா ?
என்றெல்லாம் அறியாமையால் தவறுகளை செய்யும் பாமரர்களை பார்த்து இது போன்ற எதிர்கேள்விகளை கடந்த காலங்களில் வழமையாக படித்தவர்கள் தற்பெருமையுடன் கேட்டுக்கொண்டிருப்பார்கள்
காரணம் படிப்பறிவே மனிதனை பக்குவப்படுத்தும்
படிப்பறிவே மனிதனை பண்படுத்தும்
என்பதே அதன் பின்னனியாகும்
அறியாமையில் தவறை செய்யும் பாமரனுக்கு இக்கேள்விக்கான பதிலை துணிச்சலுடன் அச்சூழலில் சொல்ல இயலாது
காரணம் தவறு செய்பவன் அந்நிலையில் சமாதானத்திற்கு எதை சொன்னாலும்
மக்களிடம் எடுபடாது
உண்மையில் படிப்பறிவுக்கும்
அழகிய பண்பாடுகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை
படிப்பறிவு இல்லாமலும் ஒரு மனிதன் அவனது பகுத்தறிவை கொண்டே நல்லவனாக ஒழுக்கமுள்ளவனாக சிறந்தவனாக திறமையானவனாக அதிகாரம் பெற்றவனாக
வசதி உடையவனாக உலகில் பிறருக்கு எடுத்து காட்டாக வாழ முடியும்
தற்கால உலகில் படிக்காத எவனும்
நவீன வழிகேடுகளை உருவாக்கவில்லை
மாறாக நவீன வழிகேடுகளை புதுமையான கோணத்தில் கவர்ச்சியான கோணத்தில் உருவாக்கி கொண்டிருப்பவர்களும் படித்தவர்களே
அதற்கான நூற்றுக்கணக்கான சான்றுகளில் ஒன்றே கல்லூரிகளில் படிப்பவர்களை பற்றி
நீங்கள் கேள்விப்படும் ராகிங் கொடுமைகள்
பாடசாலைகளில் படிக்க செல்லும் மாணவ மாணவியர்கள் தற்காலத்தில் மதுஅருந்துவதும் ரவுடிகளை போல் நடந்து கொள்வதும் ஆசிரியர்களை அவமதிப்பதும் மாணவர்களையே காதல் பெயரில் ஆசிரியைகள் சீரழிப்பதும் சுதந்திரம் எனும் பெயரில் ஒழுக்கம் கெட்டு சீரழிவதும் சர்வசாதாரணமாகி விட்டது
இறையச்சத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் இஸ்லாமிய உணர்வுள்ளவர்களே பல சந்தர்ப்பங்களில் தடுமாறும் நிலையில் வருமானத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட உலக கல்வி திட்டங்கள் எந்த
சமூக மாற்றத்தையும் நிச்சயம் உருவாக்காது
கிழிந்த ஆடையை ஊசி கொண்டு கையால் தைத்து விட்டு பாமரன் வெளியுலகில் நாணத்துடன் நடமாடுகிறான்
கிழிக்கப்பட்ட ஆடையை பேஷனாக கருதி
விலை கொடுத்து வாங்கி அணிந்து கொண்டு படித்தவளும் படித்தவனும் சமூகத்தில்
கூச்ச நாணமின்றி நடமாடுகின்றனர்
கைகளில் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு ஆண் என்ற அம்சம் மாறாது சமூகத்தில் நடமாடியவன்
தற்போது காதுகளில் பெண் போல் கம்மல் அணிந்து கொண்டு கைகளில் வலையல் மாட்டிக்கொண்டு உதட்டில் சாயம் பூசிக்கொண்டு மாடல் என்ற பெயரில் தலைமுடியை அலங்கோலமாக்கி அரைவேக்காடுகளை போல் படித்தவன் நடமாடுகிறான்
மார்க்க உணர்வுள்ள பெற்றோர்கள் இவ்விசயத்தில் கவனமும் கண்டிப்பும் தவறினால் வருங்கால சந்ததிகள் நடமாடும் பகுத்தறிவற்ற கால்நடைகளாகவே வலம் வருவார்கள்
சுட்ட பின் பதறுவதை விட
சுடும் முன் தற்காப்பு பேணுவதே மனிதனின் பகுத்தறிவும் இஸ்லாமிய மார்க்க அறிவும் கற்றுத்தரும் பாடம்
وَّلَاُضِلَّـنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَـتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا
நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன் அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன் அல்லாஹ்வின் படைப்புகளின் கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன் என்றும் ஷைத்தான் கூறினான்
எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ
அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்
(அல்குர்ஆன் : 4:119)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
13-2-2025
Comments
Post a Comment