2025 ரமலான் பாகம் இரண்டு

      2025 ரமலான் மாதத்தின் தொடர்
                  பாகம்  இரண்டு 
             **********************

இந்த நோய் இருந்தால் 
நோன்பை தவிர்க்க  சலுகை உண்டா
அந்த நோய் இருந்தால் 
நோன்பை தவிர்க்க சலுகை உண்டா
என்ற கேள்வி பரவலாக ரமலான் மாதத்தை முன்னிட்டு  கேட்கப்படுகிறது 

நோய்கள் பல வகையானது
அதில் குறிப்பிட்ட நோய்களை பட்டியல்  காட்டி நோன்பை தவிர்ப்பதற்கு இஸ்லாத்தில் 
வழிகாட்டல் இல்லை 

காரணம் எந்த நோயும் மனிதனின் உடல்நிலையை பொருத்து அதன் பாதிப்புகள் விளைவுகள் மாறுபடும் 

நீரழிவு நோயை அனுபவிப்பவர்கள் அனைவரும் 
ஒரே விதமான பாதிப்புகளை சமநிலையில் சந்திப்பார்கள் என்று உறுதியாக கூற இயலாது

எந்த நோய் நோன்பு நோற்பதால் பாதிப்புகளை அதிகரித்து கொண்டே செல்லும் என்பதை நோயாளியால் தெளிவாக உணர முடிகிறதோ 
அது எந்த நோயாக இருப்பினும் அவர்களை பொருத்தவரை மார்க்கத்தில் ரமலான் மாதத்தில் நோன்புகளை தவிர்ப்பதற்கு  சலுகையை பெறும்


இதை உணர்ந்து செயல்படுவதே 
ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் 



மார்க்கத்தின் சட்டம் எளிதானது
கடைபிடிக்கிறோம் எனும் பெயரில் சிரமங்களை வருத்திக்கொள்ளக்கூடாது என்பதே நோய்களுக்கு இஸ்லாம் கூறும் வரம்புகளாகும்


شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ  وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்
(நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது
ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்
எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும் அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை
குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)

(அல்குர்ஆன் : 2:185)



     நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           27-2-2024

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்