இல்லத்தரசிகளுக்கு
இல்லத்தரசிகளுக்கு
**************
கட்டுரை எண் 1527
************
கணவனுக்கு மனைவியும்
மனைவிக்கு கணவனும்
இக்கட்டான சூழலில்
சோகமான சூழலில்
சிரமப்படும் வேளையில்
உளவியலுக்கு ஆறுதலாக நடப்பதே
திருமண வாழ்வின் அடிப்படை
இச்சைக்கு இணைவதற்காக மட்டும்
திருமண பந்தம் தேவை இல்லை
அதற்காக ஒரு ஆண் மகன் அவனது உழைப்புகளை ஒரு பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் செலவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை
இதுவே வாழ்க்கை தத்துவம்
திருமணம் செய்வதற்கு முன்பே இப்பாடத்தை அடிப்படையாக உணர வேண்டும்
அவ்வாறு உணராது திருமண பந்தத்தில் நுழைந்தால்
நாளடைவில் இருவரும் ஊருக்கு கணவன் மனைவியாக வாழ்வார்களே தவிர இதயப்பூர்வமான இணைப்பில் கணவன் மனைவியாக வாழமாட்டார்கள் என்பதை நூறு சதவிகிதம் புரிய வேண்டும்
இல்லறவியல் இணைப்பு
முறையாக இல்லாதவர்கள்
அல்லது அதன் தன்மையை இழந்தவர்கள்
அல்லது அதிருப்தியோடு வாழும் தம்பதிகள் கூட ஒருவருக்கொருவர் உளவியல் அறிந்து நடந்து கொள்வதால் மட்டுமே வாழ்வில்
பிரியாது வாழ்கின்றனர்
குடும்ப பாரத்தை சுமக்கும் கணவன் வெளியுலகில் பல விவகாரங்களை சந்தித்து கவலையுடன் வீடு திரும்பும் வேளையில் கணவனின் உளவியலை அறிந்து நடக்கும் மனைவியர்கள் தற்காலத்தில் மிகவும் குறைவு
வெந்தப்புண்ணில் வேல் இறக்குவதை போல் மனைவியரின் அணுகுமுறை இருப்பதால் கணவனுக்கு மனைவியின் மீது இருக்க வேண்டிய ஈர்ப்புணர்வு குறைவதையும் திசை மாறுவதையும் மனைவியர்கள் உணருவது இல்லை
கணவனின் வருமானம் அறிந்து கொண்டே
அவனது சக்திக்கு மீறிய எதிர்பார்ப்புகளை திணிப்பதும்
கணவன் மகிழ்வாக எதை வாங்கி கொடுத்தாலும் அதை மட்டமான பொருளாக கருதுவதும்
அல்லது பிறருடன் ஒப்பிட்டு கணவனின் திறனை
தரம் தாழ்த்துவதும்
நஷ்டத்தை சந்தித்து வீடு திரும்பும் கணவனின் மனநிலையை அறியாது கடிந்து பேசுவதும்
முகத்தை திருப்பி செல்வதும் மனைவியர்களின் வாடிக்கையான செயலாக காண முடிகின்றது
தன் குடும்பத்தை சார்ந்தவர்கள்
வீடு தேடி வரும் போது பாசத்துடன் உபசரிப்பதும்
கணவன் குடும்பத்தார் வீடு தேடி வரும் போது உபசரிப்பில் கவனம் குறைப்பதும் மனைவியரின் வாடிக்கையாக உள்ளது
இவையாவும் கணவனின் உணர்ச்சி நரம்புகளை பலவீனப்படுத்தும் என்ற உளவியலை அறியாது மனைவியர்கள் தனது இல்லற வாழ்வை நாசமாக்கி கொள்கின்றனர்
நினைத்தவுடன் கணவனுடன் இணைய கணவனின் உடலில் சுவிட்ச் பாக்சு ( Switch box ) மாட்டப்படவில்லை
கணவனின் மனதை திருப்திப்படுத்தாது கணவனின் உணர்ச்சி நரம்புகள் வேலை செய்வதும் இல்லை
மூல காரணிகளை சரி செய்யாது
கணவன் தன்னிடம் அக்கரை காட்டுவது இல்லை என்று புலம்புவது மார்க்கப்பார்வையிலும் தவறானது
நினைத்த நேரத்தில் பிரிவதற்கும் இணைவதற்கும் திருமண பந்தம்
நட்பு பந்தம் அல்ல
இஸ்லாம் குறிப்பிடுவது போல் கணவன் மனைவிக்கு ஆடையாக இருக்கின்றாரா என்று மட்டும் எதிர்பார்த்தால் போதாது மாறாக கணவனுக்கு
நாம் ஆடையாக இருக்கின்றோமா என்பதை மனைவியர்கள் யோசிக்க வேண்டும்
பொருளாதாரத்தை மட்டும்
ஈட்டி தருவதற்கு கணவன் என்பவன்
பணம் அச்சடிக்கும் இயந்திரமும் அல்ல
கணவனின் கட்டுப்பாடுகளை மீறி நடப்பதற்கு பெயர் இஸ்லாமிய பெண் சுதந்திரமும் அல்ல
அப்படியானால் மனைவியிடம் கணவன் எம்முறையில் நடந்து கொள்ள வேண்டும்
தொடரும் !!!!!!!!!!!!!!
عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قُلْتُ يَا رَسُوْلَ اللهِﷺ اَيُّ النَّاسِ اَعْظَمُ حَقًّا عَلَي الْمَرْأَةِ؟ قَالَ: زَوْجُهَا، قُلْتُ: فَاَيُّ النَّاسِ اَعْظَمُ حَقًّا عَلَي الرَّجُلِ؟ قَالَ: اُمُّهُ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
யாரஸூலல்லாஹ் ஒரு பெண் யார் மீது அதிகம் கடமைப்பட்டுள்ளாள்? என நான் கேட்டதற்கு அவளுடைய கணவன் மீது அதிகம் கடமைப்பட்டுள்ளாள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்
ஓர் ஆண் யார் மீது அதிகம் கடமைப்பட்டுள்ளான்? என நான் கேட்டதற்கு, அவனுடைய தாயார் மீது அதிகம் கடமைப்பட்டுள்ளான்'' என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்
நூல் முஸ்தத்ரக் ஹாகிம்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
26-08-2024
Comments
Post a Comment