வாழ்வியல் அறவுரை
நினைவில் நிறுத்த வேண்டிய
அறவுரைகள்
***********************
ஒவ்வொரு மனிதனும்
வாழ்வில் ஏதோ ஒரு வகையில் சங்கடத்தை அனுபவிக்க கூடியவனாக
அல்லது சங்கடத்தை ஏற்படுத்தும் சூழலை
வலிய தேடிச்செல்லும் மனிதனாகவே வாழ்கிறான்
பிறக்கும் மனிதனுடன் சோதனைகளை இணைத்து இறைவன் எவரையும் அனுப்புவது இல்லை
விதிவிலக்கு அரிது
மனிதனின் மடமையாலும்
அவசியமற்ற செயல்களாலுமே
மனித வாழ்வில் சோதனைகள் பீடிக்க துவங்குகிறது
சில சோதனைகள் உறவுகளாலும்
சில சோதனைகள் அறியாமையிலும்
பல சோதனைகள் மனதில் Abstract
தீய எண்ணங்கள்
சஞ்சலங்கள்
ஆசைகளாலுமே ஏற்படுகிறது
ஒவ்வொரு உறுப்புகளையும் இறைவன்
எதற்கு வழங்கியுள்ளானோ
எந்த வகையில் பயன்படுத்த வழங்கினானோ
எந்த நேரத்தில் பயன்படுத்த
அனுமதி வழங்கினானோ
அவ்வகையில் பயன்படுத்தினாலே
வாழ்வில் பல சோதனைகளை நிச்சயம்
தவிர்த்திருக்க இயலும்
மனம் என்பது குப்பைத்தொட்டி அல்ல
குப்பைகளை குவித்து விட்டு துர்நாற்றம் ஏற்படக்கூடாது என்று விரும்பினால்
அது நடைமுறைக்கு சாத்தியமற்ற செயலாகும்
வாழ்வில்
அழுகை ஏற்படலாம்
புலம்பல் ஏற்படக்கூடாது
வாழ்வில்
சிரமம் ஏற்படலாம்
சிக்கல் ஏற்படக்கூடாது
வாழ்வில்
உடல்நோய் ஏற்படலாம்
மனநோய் ஏற்படக்கூடாது
வாழ்வில்
இழப்பு ஏற்படலாம்
விரக்தி ஏற்படக்கூடாது
வாழ்வில்
பொருளியல் தேவை ஏற்படலாம்
பொருளியல் பேராசை ஏற்படக்கூடாது
மனிதனின் வாழ்நாளுக்கு உறுதுணையாக இருக்கும் உயிரையே என்றாவது இழப்போம் என்று சகித்து சாதாரணமாக எதிர்நோக்கும் மனிதனுக்கு
வாழ்வில் அடிக்கடி ஏற்படும் சோதனைகள் வேதனைகள் நிச்சயம் பெரியதாக தெரியக்கூடாது
اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ
உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால் அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது
இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்
இதற்குக் காரணம் ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும் உங்களில் உயிர் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்
இன்னும் அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை
(அல்குர்ஆன் : 3:140)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
11-8-2024
Comments
Post a Comment