வயநாடு படிப்பினை

         வாழ்வை தடுமாறச்செய்யும்
                 வயநாடு படிப்பினை
                    ***************
                       கட்டுரை 1525
                          **********

இறைவனால் படைக்கப்பட்ட உயிரினமாக இருந்தாலும் சரி
ஜடப்பொருளாக இருந்தாலும் சரி 
பலம் பொருந்திய படைப்பாகிலும் சரி
பலம் குன்றிய படைப்பாகிலும் சரி 
எதுவும் ஒரு நாள் அழிந்தே தீரும் என்பதே 
இறைவன் வகுத்த நியதி 


துவக்கத்தில் இருப்பதை போன்று எந்த ஒன்றும் நிலையாக இருந்ததும் இல்லை இருப்பதும்  இல்லை 


மனிதனை  பல நோய்கள் தாக்குவதை போல் இறைவன் படைத்த பூமிக்கு இறைவனால் ஏற்படுத்தும் நோய்களே இயற்கை சீற்றங்கள் 


பூகம்பம்
சுனாமி 
மலைச்சரிவு 
நிலச்சரிவு
எரிமலை 
வெள்ளப்பெருக்கு
வறட்சி
போன்றவை பூமி சந்திக்கும் நோய்களில் சில 


நோய்கள் முற்றும் போது மரணம் அணைப்பது போல் பூமியின் வலிமை குன்ற  குறைய இறுதியில் பூமி சந்திக்கவிருக்கும் நாளையே இஸ்லாம் 
உலக அழிவு நாள் என்று சொல்கிறது 


அத்தகைய நாளை பூமியே எதிர்நோக்கும் போது 
அந்த பூமியில் அர்ப்ப காலம் தஞ்சம் அடைந்த மனிதா 

ஆணவத்தால் ஆடாதே
அதிகாரத்தால் துள்ளாதே
பண மமதையால் அலையாதே

பூமியில் உன்னை புதைக்கும் 
நாள் வரும் முன்பே 

பூமியே 
உன்னை சரித்து விடும் 

உன் பண பலத்தை விழுங்கி விடும்

உன் உறவை வெட்டி விடும்

உன் வாழ்விடத்தை நீர்மூலமாக்கி விடும் 

உன் வசதிகள் மக்கிப்போய் விடும்

என்பதை கற்றுத்தரும் 
வாழ்கையின்  சமீபத்திய  பாடமே

வயநாடு நிலச்சரிவு  !!! 

இழந்த உயிரை மீட்ட இயலாது
இடிந்த கட்டிடங்களை நிமிர்த்த இயலாது



உழைப்பில் சேகரித்த வருமானத்தில் சிறு அளவு உதவித்தொகையே தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய அவசிய தேவை 

அனைத்தையும் இழந்து அனாதை போல் 
விழி பிதுங்கி நிற்கும் மக்களுக்கு இறைவனிடம்  பிரார்த்தனை முறையிடுவதே 
நாம் செய்ய வேண்டிய 
அடிப்படை தேவை 



اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ‌ وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ‌ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ‏


உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால் அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது
இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்
 இதற்குக் காரணம் ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும
 இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை

              (அல்குர்ஆன் : 3:140)




        நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                            2-8-2024


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்