இல்லத்தரசிகளுக்கு
இல்லத்தரசிகளுக்கு ************** கட்டுரை எண் 1527 ************ கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் இக்கட்டான சூழலில் சோகமான சூழலில் சிரமப்படும் வேளையில் உளவியலுக்கு ஆறுதலாக நடப்பதே திருமண வாழ்வின் அடிப்படை இச்சைக்கு இணைவதற்காக மட்டும் திருமண பந்தம் தேவை இல்லை அதற்காக ஒரு ஆண் மகன் அவனது உழைப்புகளை ஒரு பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் செலவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை இதுவே வாழ்க்கை தத்துவம் திருமணம் செய்வதற்கு முன்பே இப்பாடத்தை அடிப்படையாக உணர வேண்டும் அவ்வாறு உணராது திருமண பந்தத்தில் நுழைந்தால் நாளடைவில் இருவரும் ஊருக்கு கணவன் மனைவியாக வாழ்வார்களே தவிர இதயப்பூர்வமான இணைப்பில் கணவன் மனைவியாக வாழமாட்டார்கள் என்பதை நூறு சதவிகிதம் புரிய வேண்டும் இல்லறவி...