நிச்சயம் செய்தால் ஹராம் ஹலால் ஆகுமா
நிச்சயம் நடந்தால்
ஹராம் ஹலால் ஆகிவிடுமா
********************
கட்டுரை எண் 1520
***************
நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் திருமணம் ஆகும் வரை தொலைத்தொடர்பு மூலம் தனிமையில் பேசி கொண்டிருப்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட காரியம் என்பதை முஸ்லிம்கள் அறியவில்லை
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம் என்ற போலியான காரணத்தை சொல்லியே இந்நிலை தொடர்கிறது
பெற்றோர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை
திருமணம் செய்யப்போகிறோம்
என்ற நம்பிக்கையில் அவசியமற்ற பேச்சுக்கள் விசாரணைகள் ரகசிய பரிமாற்றங்கள் இருவருக்குள் நிகழும் போது ஏற்படும் பின் விளைவுகளை
இரு சாராரும் சிந்திப்பது இல்லை
மனிதன் என்ற முறையில் இருவரின் மனநிலையும் திடீரென மாறக்கூடியதாகும்
இருவரில் ஒருவரின் மனநிலை மாறினாலும் அதனால் அவசியமற்ற உளைச்சல்களை வாழ்வில் நிச்சயம் சந்திப்பார்கள்
குறிப்பாக பெண்கள் இவ்விசயத்தில் கவனமற்று இருந்தால் சில வேளை முடிவாக்கப்பட்ட திருமணம் தடைபெறும் சூழலில் எதிர்கால திருமண வாழ்விலும் இச்சந்திப்பு மனஉறுத்தலை அவசியமற்ற சிந்தனைகளை ஏற்படுத்தும்
தொடர்ந்து பேசியதின் விளைவாக திருமணம் தடையான பிறகும் அவர்களுக்குள் ஏதோ ஒரு வகையில் பரிமாற்றம் தொடரும்
ஒருவர் தொடர்பு கொண்டாலும் அதை மற்றொருவர் தவிர்க்க முடியாத நிர்பந்தத்தை சந்திப்பார்கள்
இதன் காரணமாக நடைபெற்ற விவாகரத்துகளும் உண்டு
புதிதாக அமையும் மணவாழ்வுக்கு இப்பழக்கம் முட்டுக்கட்டையாகவும் அமையக்கூடும்
திருமணம் செய்ததற்கு பிறகே
எவரும் எவரைப்பற்றியும் முழுமையாக அறிய முடியும்
திருமணத்திற்கு முன் பேசிக்கொள்ளும் உரையாடல்களில் மிகைப்படுத்தும் செய்திகளும் பொய்களும் மெய்களும் கலந்தே இருக்கும்
இதனால் பிளவுபட்ட குடும்பங்களும் ஏராளம் உண்டு
எந்த முறையில் வாழ வேண்டும் என்று முடிவு செய்து திருமண பந்தத்திற்குள் நுழைய வேண்டுமே தவிர
இந்த முறையில் வாழ வேண்டும் என்று இருவரும் பேசிக்கொண்டு நுழைவதற்கு திருமண பந்தம் என்பது யூகித்து தயாரிக்கப்படும் திரைப்படம் அல்ல
திருமணம் செய்யும் நாட்களை தள்ளி வைத்து விட்டு வரனை தேடாதீர்கள்
துணை யார் என்று தீர்மானித்து விட்டால்
திருமணம் செய்யும் நாட்களையும் பிற்படுத்தாதீர்கள்
பத்து வருடம் ஒருவரை காதலித்து திருமணம் செய்தாலும்
பல உடன்படிக்கைகளை போட்டு திருமணம் செய்தாலும்
இரு குடும்பத்தார் முடிவு செய்து திருமணம் செய்து வைத்தாலும்
மனித இயல்புகளை
உடலியல் வேறுபாடுகளை
பலவீனங்களை
உலவியல் மாறுதல்களை
குடும்ப அமைப்புகளை
பொருளியல் சகிப்புகளை
எதார்த்தமாக உணராத எவருடைய இல்லற வாழ்வும் கசந்தே போகும்
படித்தவர்களும் படிக்காதவர்களும் இதில் சமமே
இது தான் நடைமுறை உண்மை
முதல் திருமணம்
மறுதிருமணம்
யாவற்றுக்கும் இது பொதுவானதே
திருமணம் நடக்கும் வரை
இரு சாராரும் பெற்றோர் குடும்பத்தார் தொலைத்தொடர்பு மூலமாகவே கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்
இரு குடும்பத்தார் கண்களை மறைத்து விட்டு தொடரும் பேச்சுக்கள் விரைவில் தீர்வை நோக்கியும் பயணிக்காது
நடைமுறை வாழ்வை நோக்கியும் பயணிக்காது
ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பது
உலக அதிசயமும் அல்ல
பல தியாகங்களை செய்து முடிக்கும்
சரித்திர சாதனையும் அல்ல
உலகில் எளிமையான விசயங்களில் திருமணமும் முக்கியமான ஒன்று
இக்கட்டுரை தரும் படிப்பினைகள்
சிலருக்கே பயன் தரும்
படிப்பினைகளை உதாசீனம் செய்வோர் வாழ்வில் இழப்புகளை சந்தித்த பின்பே
வருந்துவார்கள்
அடி பட்ட பின் வருந்துவதால் எவ்வித பயனும் இல்லை
வாழ்கையில் ஏற்படும் பல சோதனைகள் மனிதனின் முன்னெச்சரிக்கையின்மையால் மட்டும் ஏற்படுகிறது
தீயை தொட்டால் சுடும் என்பதை
தீயை தொட்டுப்பார்த்து அறிபவர் அறிவாலி அல்ல
عن معقل بن يسار يقول : قال رسول الله صلى الله عليه وسلم : " لئن يطعن في رأس أحدكم بمخيط من حديد خير له من أن يمس امرأة لا تحل له " .
رواه الطبراني في " الكبير " ( 486 ) .
والحديث : قال الألباني عنه في " صحيح الجامع " ( 5045 ) : صحيح
அனுமதிக்கப்படாத பெண்ணை தொடுவதை விட உங்கள் தலையில் இரும்பில் செய்யப்பட்ட ஊசியை கொண்டு குத்துவது மேலானதாகும் என நபியவர்கள் சொன்னதாக மஃகல் இப்னு யசாத் ( ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது
நூல் தப்ரானி கபீர் 486
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
3-7-2024
Comments
Post a Comment