விவாகரத்து விரிசல்கள்
விவாகரத்து விரிசல்கள்
****************
வாழ்கையில் வயதுக்கு மீறிய தவறான அனுபவங்களை இளைய சமூகம் எளிதாக காணுவதாலும் சந்திப்பதாலும்
எதிர் காலத்தில் திருமண வாழ்கையில்
விரைவாக தோல்விகளை சந்திப்பார்கள்
விரக்திகளால் உந்தப்பட்டு தவறான பாதைகளால் சீரழியும் இளைய சமூகம் திருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து முறையீடு வைத்து விழிபிதுங்க வரிசையில் காத்திருப்பார்கள் என்றது 2022 ஆண்டில் குடும்பநல நீதிமன்றங்கள்
தற்போது அதை நோக்கியே
இளைய சமூகம் பயணிக்கிறது
கவர்ச்சிகளிலும் போலிகளிலும் மதிமயங்கி
எதார்த்த வாழ்கையை தொலைத்து நிற்கிறது
விவாகரத்து பத்திரிக்கை அடிக்கும் வழக்கம் சமூகத்தில் இருந்திருந்தால் தற்காலத்தில் திருமண பத்திரிக்கையை விட விவாகரத்து பத்திரிக்கையே அதிகம் விற்பனையாகும் என்கிறது
குடும்ப நல நீதிமன்றங்கள்
மனதில் ஏற்பட்ட கோளாறுகளை ஆண்மைக்கோளாராக கருதும் ஆடவர்களும்
கற்பனையில் மாடி கட்டியதால்
உண்மையான வாழ்வில் சரிவை சந்தித்து விட்டதாக கருதும் அதிகரித்து விட்டனர்
எனக்கு அமைந்த கணவனே இப்படி
எனக்கு அமைந்த மனைவியே இப்படி
என்ற தவறான அழுத்தம்
புதிய தம்பதிகளிடம் உருவாகி வருகிறது
உலக அழகியை திருமணம் செய்தாலும்
ஆணழகனை திருமணம் செய்தாலும்
படித்து பட்டம் பெற்றவர்களை திருமணம் செய்தாலும்
பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டாலும்
சுயமாக தேர்வு செய்தாலும்
உடலியல் உலவியல் எனும்
இயற்கை அமைப்புகளை ஜீரணிக்காத
எவரும் திருமண வாழ்வில் நிம்மதியை பெற இயலாது
குறிப்பிட்ட காலம்
ஆணும் பெண்ணும் உடலால் இணைந்து
பிரிந்து செல்வதற்கு
திருமண எனும் கண்ணியமான
பந்தம் தேவை இல்லை
மாறாக
உறவுகள் விரிவடையவும்
மகிழ்வுகள் வலுவடையவும் பயன்படுத்தப்பட வேண்டிய பாலமே
திருமண எனும் பந்தம்
இரவில் உறங்கச்செல்லும் போதும்
அதிகாலை எழும் போதும்
ஆண் பெண் எந்நிலையில் இருப்பார்களோ
அதுவே ஒவ்வொரு மனிதனின்
உண்மையான முகம்
தாய் தந்தை
அண்ணண் அண்ணி
தங்கை மச்சான்
எவ்வாறு வாழ்வதை அன்றாடம் காணுகிறோமோ
அதுவே திருமண வாழ்கை
சினிமா காதல் கதைகளும்
சமூகவலைத்தளம் ஈர்ப்புகளும்
எதார்த்த வாழ்கைக்கு உதவாது
எந்த ஒன்றை நீங்கள் விரும்பினாலும்
அந்த ஒன்றும் சில காலத்தில் சலிப்பை தரும்
அந்த ஒன்றும் சிலரால் ஒதுக்கப்பட்டதாக இருக்கும்
பலரால் கண்டு கொள்ளப்படாததாகவே அமைந்திருக்கும்
அதை காரணம் காட்டி
கணவனும் தன் மனைவியை
வெறுத்து விடக்கூடது
மனைவியும் தன் கணவனை
வெறுத்து விடக்கூடாது
என்பதற்காகவே திருமணம் எனும் பந்தத்தால்
பல அரண்களை நிர்பந்தங்களை கண்காணிப்புகளை இறைவன் ஏற்படுத்துகிறான்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
12-5-2024
Comments
Post a Comment