குர்பானியை உதாசீனம் செய்வோர்
குர்பானியை உதாசீனம்
செய்யாதீர்
**********************
கட்டுரை எண் 1517
************
குர்பானி கொடுப்பவர் தனித்து கொடுக்கும் அளவு வசதியுள்ளவரா என்பதை பெரும்பாலும் பார்ப்பது இல்லை
கூட்டுக்குர்பானிக்கு ஆள் சேர்ந்தால் போதும் என்ற எண்ணமே
தற்போது ஜமாத்துகளில் நிறைந்துள்ளது
இதன் காரணமாக தனித்து குர்பானி கொடுக்கும் வசதி பெற்றவர்களையும் கூட்டு குர்பானியில் இணைக்கும் முயற்சி மேலோங்கி விட்டது
இறைவன் வழங்கிய செல்வத்தின் அளவை இறைவன் அறிந்தே இருக்கிறான் என்பதை தனித்து குர்பானி கொடுக்கும் வசதி பெற்றும் கூட்டுக்குர்பானியில் இணைவோர் சிந்திப்பது இல்லை
இந்நிலை மாற வேண்டும்
மாற்றப்பட வேண்டும்
வழிபாடுகள் யாவும் இறைவனின் திருப்தியை பெறுவதற்கு செய்யும் நல்லறங்களே தவிர சடங்கிற்கு நிறைவேற்றும் காரியம் அல்ல
وَمِنْهُمْ مَّنْ عَاهَدَ اللّٰهَ لَٮِٕنْ اٰتٰٮنَا مِنْ فَضْلِهٖ لَـنَصَّدَّقَنَّ وَلَنَكُوْنَنَّ مِنَ الصّٰلِحِيْنَ
அவர்களில் சிலர் அல்லாஹ்
தன் அருட்கொடையிலிருந்து நமக்கு அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்
فَلَمَّاۤ اٰتٰٮهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ
(அது போல் ) அவன் அவர்களுக்கு
தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து
அவர்கள் புறக்கணித்தவர்களாக
பின் வாங்கிவிட்டனர்
فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِىْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி)
நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்
اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُيُوْبِ
அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும் அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும் மறைவானவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும்
அவர்கள் அறியவில்லையா?
(அல்குர்ஆன் : 9: 75, 78)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
9-6-2024
Comments
Post a Comment