அஞ்ஞானிகளால் ஈமானிய ஆபத்து
குட்டையை கிளப்பும் அஞ்ஞானிகள்
*********************
கட்டுரை எண் 1515
***********
இஸ்லாம் இதை ஏன் தடை செய்துள்ளது ?
அதை ஏன் தடை செய்துள்ளது தெரியுமா ?
என்று அதன் காரணங்களை
விளக்குவதற்கு முற்பட்ட சில அஞ்ஞானிகளால் ஏற்படுத்தப்பட்ட சமூக சர்ச்சைகளே ஏராளம்
கரையை நோக்கி பயணிப்பதை விட நடுக்கடல் வரை சென்று மீளமுடியாது தத்தளிப்பதே முஸ்லிம்களின் வாடிக்கையாகி போனது
முஸ்லிம் அல்லாத பிறர்களுக்கு
இஸ்லாமிய அழைப்பு பணியை மேற்கொள்ளும் போது அஞ்ஞானிகளால் இஸ்லாத்தின் பெயரில் நுழைக்கப்பட்ட அவசியமற்ற சர்ச்சைகளுக்கு விளக்கம் தருவதே முதல் பணியாக மாறி விட்டது
இறைவனும் இறைத்தூதர் ( ஸல் ) அவர்களும் கற்பித்து தராத காரணங்களை மார்க்கத்தின் பெயரில் விளக்கி கொண்டிருப்பது முஸ்லிம்களின் அழைப்பு பணியும் அல்ல
சமூகவலைத்தளத்தில் மாணவர்களாக வலம் வருபவர்களை விட அறிஞர்களாக மேதாவிகளாக தங்களை காட்டிக்கொள்பவர்களே பெருகி விட்டனர்
இஸ்லாம் கற்பிக்கும் ஒவ்வொரு விசயத்திற்கும்
சுய விளக்கத்தை கற்பித்து கொண்டிருந்தால்
அதன் மூலம் ஏற்படும் பயனை விட எதிரிகளின் விமர்சனங்களே முதலிடம் வகிக்கும்
நெஞ்சின் மீது ஏன் தக்பீர் கட்டுகிறோம்
பெருநாள் தொழுகையை
ஏன் தொழுகிறோம்
அத்தஹிய்யாத் ஏன் ஓதுகிறோம்
என்பன போன்ற கேள்விகளும் அதற்கு தரப்படும்
சுய விளக்கங்களும்
செவியுருவதற்கும் படிப்பதற்கும் பரப்புவதற்கும் இனிமை தரலாம்
ஆனால் மறுமை நாளில் நிச்சயம் அதன் தேடல்களும் பதில்களும் முஸ்லிம்களுக்கு பயனை தராது
நபி ( ஸல் ) அவர்களால் விளக்கி சொல்லப்படாத
பல நம்பிக்கைகளும் சட்டங்களும் நுட்பமான விசயங்களும் இஸ்லாத்தில் உண்டு
இறைநம்பிக்கையில் ஆழம் இல்லாதவர்களுக்கு அவைகள் திருப்தி ஏற்படுத்தாது இருக்கலாம்
ஆனால் இறைவனால் ஹிதாயத் வழங்கப்பட்டவர்களுக்கு அவைகள் கடுகளவும் இறைநம்பிக்கையில் சந்தேகத்தை விளைவிக்காது
எத்தி வைக்கும் பணிகளை மட்டும் மேற்கொள்ளுங்கள்
இஸ்லாம் காரணம் கற்பிக்காது எடுத்துச்சொல்லும் விசயங்களை விளக்கி சொல்லும் அதிமேதாவித்தனத்தை கைவிடுங்கள்
இஸ்லாத்தின் பெயரில் பெறப்படும் செய்திகள் ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில்
குர்ஆன் சுன்னாவிற்கு முரண்படாத பட்சத்தில் அவைகளை ஏற்றுக்கொள்வதே போதுமானது
அதிலும் சட்ட சிக்கல்கள் கருத்து வேறுபாடுகள் நிகழும் பட்சத்தில் அவைகளை மார்க்கத்தை முறையாக கற்று அனுபவம் பெற்ற அறிஞர்கள் விவாதித்துக்கொள்ளட்டும்
அவைகளை உற்று நோக்கி எக்கருத்தையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளட்டும்
ஒரு விசயத்தை சிந்தித்து தவறானதை கூட சரியானதாக கருதும் நபர்களை இஸ்லாம் கண்டிக்கவில்லை
ஆனால் சிந்தனையை பூட்டி வைத்து வைத்து விட்டு
சிந்திக்க இயலாத காரியங்களில் மூக்கை நுழைப்பதும்
விவாதிப்பதை முன்னிலைப்படுத்தி
விடைகளை நோக்கி பயணிக்காது இருப்பதும்
வீண் சச்சரவுகளில் ஈடுபடுவதுமே
இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது
கேள்விகளை அடுக்கி கொண்டே செல்வதும்
எதிர் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்பதும்
ஈமானை மெருகு படுத்தாது
மாறாக தீர்வுகளை நோக்கி நடப்பதும்
தீர்வு தராத விசயங்களை விட்டு ஒதுங்கி இருப்பதுமே ஈமானை செவ்வையாக்கும் வழிமுறையாகும்
குர்ஆன் சுன்னா மட்டுமே தற்போது தாய்மொழியில் உள்ளது
அதன் விளக்கங்கள் வரலாற்று பின்னனிகள் ஆயிரக்கணக்கில் மூலமொழியில் மட்டுமே
இன்றும் தேங்கியுள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
அறிந்ததை இயன்றவரை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று இறைவன் மறுமை நாளில் கேள்வி கேட்பானே தவிர
அறியாத விசயத்தில் மூக்கை நுழைத்து ஏன் குட்டையை கிளப்பவில்லை என்று இறைவன் கேள்வி கேட்டு எவரையும் தண்டிக்கப்போவது இல்லை
தகுதிக்கு ஏற்ற சிந்தனையை வளர்த்தி கொள்ளுங்கள்
தகுதிக்கு மீறிய புலனாய்வில்
வீழ்ந்து மறுமை வாழ்வை நாசமாக்கி கொள்ளாதீர்கள்
அறிவு மனிதனை அழகாக்கவும் பயன்படும்
அறிவு மனிதனை பாழாக்கவும் பயன்படும்
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا
உன் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உன்னை நீதிபதியாக ஏற்று பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும்
தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில்
அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்
(அல்குர்ஆன் : 4:65)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
20-5-2024
Comments
Post a Comment