கோவில் இடிக்கப்பட்டதா

        கடவுள் பிறப்பு புருடாக்கள்
                *******************

ஏன் தற்காலத்தில் கடவுள் எவரும் பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் பிறப்பதில்லை

அவதாரங்கள் எதுவும் ஏன் பள்ளிவாசல் கட்டப்பட்ட இடத்தில் ஜனிப்பதில்லை

CCTV CAMERA மூலம் கவனிக்கப்பட்டு 
அதன் உண்மைத்தன்மையை கண்டு பிடித்து விடுவார்கள் என்ற அச்சமா  ? 

ஏன் கடவுளர்கள் எவரும் 
பிரபஞ்சத்தின் வேறு கோள்களில் பிறக்கவில்லையா ?

அவ்வாறு பிறந்திருந்தால் அங்கும் பள்ளிவாசல்கள் இருக்கும் இடத்தில் தான் பிறப்பார்களா 



இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல்களின் இடத்திலே தவிர வேறு எங்கும்  பிறக்க மாட்டோம் என்று கடவுளர்கள் சபதம் 
செய்து விட்டனரா   ?

ஐநூறு வருடங்களுக்கு முன்
ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருந்த கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டது என்று பரப்பும் கதைகளை தற்கால மக்களால் கண்டறிய முடியாது என்பதை அறிந்து கொண்டு துவேஷத்தை உருவாக்கிட மதவெறியர்களால்  கிளப்பி விடப்படும் அவதூறுகள் தானே தவிர இது  ஆதாரப்பூர்வமான தகவல்களும் அல்ல அறிவுப்பூர்வமான தகவல்களும் அல்ல

சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு மனித மனங்களில் வேதனையை ஏற்படுத்தும் இடத்தில் பிறக்க வேண்டும் என்று நினைப்பதற்கு நீங்கள் நினைக்கும்  கடவுளர்கள் கயவர்களும்  அல்ல

கடவுளின் பிறப்பை சொல்லி மனிதர்களை கூறுபோட கருதும் ஜென்மங்கள் மனிதர்களும் அல்ல


பிறரின் பூமியில் அனுமதியின்றி படிப்பறையை  கட்டுவதை கூட வன்மையாக கண்டிக்கும் இஸ்லாம்
இறைவனை வணங்குவதற்கு திருடப்படும் இடத்தில் பள்ளிவாசலை கட்டுவதை கழிவறையாக கூட மதிப்பது இல்லை 

பிறரிடம் அபகரிக்கப்பட்ட இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது என்பதை ஆவணங்களோடும்
பத்திர பதிவுகளோடும் நிரூபணம் செய்தால் 
அந்த பள்ளிவாசலை  சங்கிகள் இடிக்க தேவையில்லை 

இஸ்லாமிய வாழ்க்கை நெறியை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் சமுதாயமே முன்னின்று பள்ளிவாசலை இடித்து தள்ளி அதற்கான நஷ்டஈடுகளையும் மகிழ்வுடன் வழங்கி மன்னிப்பையும் சலனமின்றி  கேட்டுக்கொள்வார்கள் 



حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري قال حدثني طلحة بن عبد الله أن عبد الرحمن بن عمرو بن سهل أخبره أن سعيد بن زيد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ظلم من الأرض شيئا طوقه من سبع أرضين

எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை கழுத்தில் மாலையாகக் கட்டி தொங்க விடப்படுவார்” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக 
ஸயீத் இப்னு ஜைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்

                  (நூல்: புகாரி )

       நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                             4-2-2024

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்