காதல் திருமணம்

            வாழ்வை நாசமாக்கும்
              காதல் திருமணங்கள்
         ****************************

ஐந்து வருடம் ஆனந்தமாக காதலித்து திருமணம் செய்பவர்கள் வாழ்நாளில்
இரு வருடம் கூட  இணக்கமாக வாழ்வது இல்லை என்று புள்ளி விபரம் சொல்கிறது 

காதலிக்கும் போது எளிதாக கடந்து செல்லும்  வார்த்தைகள் திருமண உறவுக்கு பின் இருவருக்கும் கடினமாக தென்படுகிறது 

காதலிக்கும் போது காதலன் மீது அதிக உரிமை கொண்டாடும் காதலியின் ஆதிக்கம் திருமணத்திற்கு பிறகு பறிக்கப்படுவது போல் பிம்பம் ஏற்படுகிறது 

ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
என்ற வரிகளுக்கு ஏற்று தனிப்பட்ட வாழ்வின் ஒழுக்கங்கள் திருமணத்திற்கு பின் இருவராலும் சந்தேகிக்கப்படுகிறது 

அதீத கற்பனைகளும் இயல்புக்கு மாற்றமான இருவரின் சிந்தனைகளும் நடை முறை வாழ்வில் பொய்பித்து போகிறது 

பெற்றோர்களால் முடிவு செய்யப்படும் திருமண பந்தத்தில் ஏற்படும் சிக்கல்களும் விவகாரங்களும் காதலித்து திருமணம் செய்வதால் ஏற்படாது என்ற குருட்டு நம்பிக்கையில் காதல் திருமணங்கள் விரைவில் முறிவை சந்திக்கிறது

இன்னும் இது போல் பல காரணங்கள் காதல் திருமண முறிவுக்கு மூலமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது 

இரு இதயங்கள் இணைவதற்கு 
பெயர் அல்ல காதல் 
இரு குடும்பங்கள் இணைக்கப்படுவதற்கு  
பெயரே காதல் 

திருமணத்திற்கு முன் கள்ளத்தனமாக பேசிக்கொள்வதற்கு 
பெயர் அல்ல காதல் 

திருமணத்திற்கு பின் நடைமுறை வாழ்வை ஏற்று சகித்து நடந்து கொள்வதற்கு பெயரே காதல் 

திருமணத்திற்கு பின் நேசிக்கப்படும் உறவுக்கு பெயரே காதல்
திருமணத்திற்கு முன் நேசிக்கப்படுவதாக கருதும் 
ஈர்ப்புகள் யாவும் காமம் 

வாழ்க்கையை சிந்தனையை வைத்து 
முடிவு செய்யுங்கள் 
ஆன்லைன் காட்சிகளை வைத்து
சினிமாக்களை வைத்து 
முடிவு செய்து விடாதீர்கள் 

இளமை வேறு
அனுபவம் வேறு 

அனுபவங்களை உற்று நோக்கி திருமண வாழ்வை அமைத்து கொள்ளுங்கள்

திருமண பந்தத்திற்குள் நுழைந்த பின் 
மீளுவதும் மீட்சி பெறுவதும் எளிதான காரியம் அல்ல 

குடும்பம்
இருப்பிடம்
எதிர்காலம்
உடலியல்
உலவியல் 

இவைகளை சிந்திக்காது அடி எடுத்து வைக்கும் பாதங்கள் நிச்சயம் சரிவை சந்திக்கும் 

வாகனங்களை இயக்க முடியும் என்ற குருட்டு  நம்பிக்கையில் தனிமையில் இயக்க நினைத்தால் விபத்துகளை எதிர்கொள்ளும் சூழலே அதிகம் 

வாகனங்களை இயக்குபவர்களின் துணை கொண்டு பயணித்தால் பல விபரீதங்கள் தடுக்கப்படும் சூழலே அதிகம் 

சோதனைகளை எதிர் கொண்டு
எதிர்ப்புகளை சமாளித்து 
தியாகங்கள் பல செய்து 
வாழ்வை தேர்வு செய்வதற்கு 
திருமணம் என்பது ஜிஹாத் அல்ல

உலகில் சிலரிடம் மட்டுமே காணப்படும் 
வசதி வாய்ப்புகள் அல்ல

மாறாக உலகில் எளிதான விசயங்களில் 
முதன்மையான விசயமே திருமணம் 

அதீத கற்பனைகளும் 
அறிவின்மையும்
உங்கள் வாழ்வை நாசமாக்கி 
விட வேண்டாம் 

இருவரின் பிரிவு இரு குடும்பத்தின் இதயங்களை ரணமாக்கி விடும்

    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           4-2-2024

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்