நீங்கள் எவ்வகை முஸ்லிம்

         நீங்கள் எவ்வகை முஸ்லிம் 
               *********************

وروى أبو سعيد الخدري  فقال : ( يولد الناس على طبقات شتى .
يولد الرجل مؤمنا ويعيش مؤمنا ويموت مؤمنا .
ويولد الرجل كافرا ويعيش كافرا ويموت كافرا .
ويولد الرجل مؤمنا ويعيش مؤمنا ويموت كافرا .
ويولد الرجل كافرا ويعيش كافرا ويموت مؤمنا ) .

وفي الصحيح من حديث ابن مسعود : ( وإن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع أو باع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها .
وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع أو باع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها 


பல படித்தரங்களில் மனிதன்  பிறக்கின்றான் 


1-இறைநம்பிக்கையாளனுக்கு  பிறந்து
   இறைநம்பிக்கையாளனாக வாழ்ந்து 
   இறைநம்பிக்கையாளனாகவே   
   மரணிப்பவன்

2-இறைமறுப்பாளனுக்கு பிறந்து 
   இறைமறுப்பாளனாகவே வாழ்ந்து
   இறைமறுப்பாளனாகவே    
    மரணிப்பவன்

3-இறைநம்பிக்கையாளனுக்கு பிறந்து 
    இறைநம்பிக்கையாளனாக வாழ்ந்து
    இறைமறுப்பாளனாக மரணிப்பவன்

4-இறைமறுப்பாளனுக்கு பிறந்து
    இறைமறுப்பாளனாக வாழ்ந்து
    இறைநம்பிக்கையாளனாக
     மரணிப்பவன்

இக்கருத்து அபூசயீத் (ரலி) அவர்கள் பெயரால் பதிவாக்கப்பட்டுள்ளது

ஒரு மனிதனின் மறுமை வாழ்வு நிரந்தர நரகத்தை அடையாது இருப்பதற்கு அவனது உலக வாழ்வின் இறுதி முடிவு சரியாக அமைய வேண்டும் 

ஒரு மனிதனின் உலக இறுதி முடிவு சரியாக அமைவதற்கு அவனது உலக வாழ்வு சீராக அமைய வேண்டும்


தான்தோன்றிகளாக வாழ்ந்து விட்டு இறுதி நேரத்தில் கலிமா சொல்லி மரணித்து விடலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் வாழ்நாளை நாசமாக்கி விடக்கூடாது 

காரணம் ஒரு மனிதனின் இறுதி முடிவு இழுபறியாகவும் இருக்கும்
கண்சிமிட்டும் நேரத்திலும் நிகழக்கூடும்

பானையில் இருப்பதுவே அகப்பையில் வரும் என்பது 
ஈமானிய வாழ்வுக்கும் பொருந்தும் 

சுவனத்திற்கு கொண்டு செல்லும் நல்லறங்களை செய்யும் மனிதன்
சுவனத்தை அடைவதற்கு ஒரு முழம் அளவு  இருக்கும் தருவாயில் நரகை  பெற்றுத்தரும் காரியத்தை செய்து வெற்றியை இழந்து விடுவான் என்றும்

நரகத்திற்குரிய காரியங்களை செய்து நரகை அடைவதற்கு ஒரு முழம் அளவு இருக்கும் தருவாயில் சுவனத்தை பெற்றுத்தரும் காரியத்தை செய்து வெற்றியை பெற்றிடுவான் என்றும்

நபி ஸல் அவர்கள் போதனை செய்திருப்பதாக 
இப்னு மஸ்ஊத் (ரலி)
அவர்கள் அறிவித்துள்ள செய்தி புகாரி முஸ்லிம் நூற்களில் ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது

பிறப்பு எப்படி இருந்தாலும்
வாழ்வின் சிறப்பும் மரணிப்பும் இஸ்லாத்தை உணர்ந்த நிலையில் அமைய வேண்டும் என்பதே திருக்குர்ஆன் கூறும் உறுதியான போதனை  

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! 
நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள் மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்

(அல்குர்ஆன் : 3:102)


    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                          7-01-2024




Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்