பாபர் மஸ்ஜித்
புதைக்கப்பட்ட விதைகள்
மக்குவது இல்லை
*******************
கட்டுரை எண் 1509
*************
அந்த நடிகன் அயோத்தி செல்கிறான்
இந்த நடிகன் அயோத்தி செல்கிறான்
அவன் எப்படி செல்லலாம்
இவன் எப்படி செல்லலாம்
என்றெல்லொம் பல அறிக்கைகளை காண முடிகிறது
பணத்திற்காக எந்த வேஷத்தையும் போடுபவர்கள் தங்கள் சொத்துக்களை தக்க வைப்பதற்கு
எந்த இடத்திற்கும் செல்வார்கள்
எப்படியும் நிறத்தையும் பூசிக்கொள்வார்கள்
என்பது சிறு பிள்ளைகளும் கூட இக்காலத்தில் அறிந்துள்ள ஞானமது
செல்பவன் பக்தியோடு தான் செல்கிறான்
என்பது அல்ல
அச்ச நிலையிலும் செல்வான்
அறியாமையிலும் செல்வான்
சுயநலத்திற்கும் செல்வான்
மதவெறியிலும் செல்வான்
விசுவாசியாகவும் செல்வான்
நீதிமன்றம் வழங்கிய இடத்தில் அவர்கள்
எதை கட்டினால் நமக்கென்ன ?
யார் சென்றால் நமக்கென்ன ?
பெயர் தாங்கி முஸ்லிம்களும்
கூட சில வேளை செல்லக்கூடும்
அவ்வாறு சென்றாலும்
அதனால் முஸ்லிம் சமூகத்திற்கோ இஸ்லாத்திற்கோ எவ்வித இழப்பும் ஏற்படப்போவதில்லை
கோவிலை இடித்து விட்டு பாபர் பள்ளிவாசலை கட்டினார் என்பதற்கு கண்ணால் கண்ட ஒரு சாட்சியும் கூட இன்று பிரபஞ்சத்தில் இல்லை
கதைகளும் அவதூறுகளும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுமே அர்ப்பமாக உண்டு
ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்து தள்ளி அதே இடத்தில் தான்
ராமர் பெயரில் கோவில் கட்டப்பட்டது என்பதற்கே கோடான கோடி மனிதர்களின் நேரடி சாட்சிகள் காணொளிகள் தற்காலத்தில் உண்டு
அந்த இடத்தில் காலடி வைக்கும் போதே
காலடி வைப்பனுக்கும் அந்த எண்ணம் தான்
முதலில் அவனது உள்ளத்தை கசக்கும்
வரலாற்றில் பாபர் பெயரை அழிக்க முற்பட்டவர்களுக்கு
இன்று அதே பாபர் தான் ஹீரோவாக
திகழ்கிறார்
புதைக்கப்பட்ட வித்துக்கள்
மக்குவது இல்லை
செடியாக மரமாக பசுமையாக மாறும்
என்பதே நிதர்சனமான உண்மை
இறைவன் மேல் பாரத்தை போட்டு
வழமை போல் மனித நேய சேவைகளில்
இனியும் தொடருவோம்
இன்ஷா அல்லாஹ்
இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் பள்ளிவாசல் தான்
வெகுதூரத்தில் உண்டு
ஆனால் அப்பள்ளியில் அழைக்கப்பட்ட
துதிக்கப்பட்ட ஏக இறைவன் அல்லாஹ்
உன் அருகிலேயே உண்டு
பாபர் மஸ்ஜிதின் டூம்களை இடித்து தள்ள முன்னனியில் இருந்த
பல்பீல்சிங்கே தனது தவறை உணர்ந்து
இஸ்லாத்தை தழுவி ஈமானுடன் மரணித்ததை விட
படுதோல்வியும் கேவலமும் அவர்களுக்கு வேறில்லை
اَفَاَمِنُوْۤا اَنْ تَاْتِيَهُمْ غَاشِيَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَاْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّ هُمْ لَا يَشْعُرُوْنَ
(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும்
அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா ?
(அல்குர்ஆன் : 12:107)
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ يُّذْكَرَ فِيْهَا اسْمُهٗ وَسَعٰـى فِىْ خَرَابِهَا اُولٰٓٮِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ يَّدْخُلُوْهَآ اِلَّا خَآٮِٕفِيْنَ لَهُمْ فِى الدُّنْيَا خِزْىٌ وَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்?
இத்தகையோர் அச்சம பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான் மேலும் மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு
(அல்குர்ஆன் : 2:114)
நட்புடன் . J .யாஸீன் இம்தாதி
21-1-2024
Comments
Post a Comment