Posts

Showing posts from January, 2024

பாபர் மஸ்ஜித்

          புதைக்கப்பட்ட விதைகள்                  மக்குவது இல்லை                    *******************                 கட்டுரை எண் 1509                       ************* அந்த நடிகன் அயோத்தி செல்கிறான் இந்த நடிகன் அயோத்தி செல்கிறான் அவன் எப்படி செல்லலாம் இவன் எப்படி செல்லலாம் என்றெல்லொம் பல அறிக்கைகளை காண முடிகிறது  பணத்திற்காக எந்த வேஷத்தையும் போடுபவர்கள் தங்கள் சொத்துக்களை தக்க வைப்பதற்கு  எந்த இடத்திற்கும் செல்வார்கள்  எப்படியும் நிறத்தையும் பூசிக்கொள்வார்கள் என்பது சிறு பிள்ளைகளும் கூட இக்காலத்தில்  அறிந்துள்ள ஞானமது செல்பவன் பக்தியோடு தான் செல்கிறான்  என்பது அல்ல அச்ச நிலையிலும் செல்வான்  அறியாமையிலும் செல்வான் சுயநலத்திற்கும் செல்வான்  மதவெறியிலும் செல்வான்  விசுவாசியாகவும் செல்வான்  நீதிமன்றம் வழங்கிய இடத்தில் அவர்கள்  எதை கட்டினால் நமக்கென்ன ? யார் சென்றால் நமக்கென்ன ? பெயர் தாங்கி முஸ்லிம்களும்  கூட சில வேளை செல்லக்கூடும் அவ்வாறு சென்றாலும்  அதனால் முஸ்லிம் சமூகத்திற்கோ இஸ்லாத்திற்கோ எவ்வித இழப்பும் ஏற்படப்போவதில்லை  கோவிலை இடித்து விட்டு பாபர் பள்ளிவாசலை கட்டினார் என்பதற்கு

இணைவைப்பு

        இறைக்கல்வியே அடிப்படை                   ****************                  கட்டுரை எண் 1508                          *********** அல்லாஹ்  என்பவன் யார் அவனது ஆற்றல்கள் என்ன இணை வைப்பு என்றால் என்ன இணை வைப்பு ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதை அடிப்படை கல்வியாக குர்ஆன் சுன்னா சான்றுகளுடன் பிள்ளைகளுக்கு போதிக்காத பெற்றோர்கள்  நிச்சயம் மறுமை நாளில்  தன் கண் முன்னே பிள்ளைகள்  நரகில் கருகுதுவதை  காண்பார்கள் இறைவன் இருக்கின்றான் என்று சொல்வது பெருமை இல்லை இறைவனின் ஆற்றலை எந்த வகையிலும் எவருக்கும் எதற்கும் மனதளவிலும் செயல் வடிவிலும்  தர மாட்டேன் என்று முடிவு செய்பவர்களே ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் முஃமீன்கள்  மக்கத்து காஃபிர்களும் நபிகளாரை தூற்றியவர்களும் அல்லாஹ்வை மறுத்தவர்கள் அல்ல நபிகளார் பூமியில் பிறப்பதற்கு முன்பே நபிகளாரின் தந்தைக்கு அப்துல்லாஹ் ( அல்லாஹ்வின் அடிமை)  என்ற அழகான பெயரை சூட்டியிருந்தவர்களே அவர்கள்  இணைவைப்பு என்பது இறைவன் விசயத்தில் செய்யும் கொடும் விபச்சாரம்  விபச்சாரத்திற்கு பல பெயர்களை சூட்டிக்கொள்வதால் விபச்சாரம்  அனுமதிக்கப்பட்டதாக மாறி விடாது இணை வைப்புக்கு  பல

நீங்கள் எவ்வகை முஸ்லிம்

         நீங்கள் எவ்வகை முஸ்லிம்                 ********************* وروى أبو سعيد الخدري  فقال : ( يولد الناس على طبقات شتى . يولد الرجل مؤمنا ويعيش مؤمنا ويموت مؤمنا . ويولد الرجل كافرا ويعيش كافرا ويموت كافرا . ويولد الرجل مؤمنا ويعيش مؤمنا ويموت كافرا . ويولد الرجل كافرا ويعيش كافرا ويموت مؤمنا ) . وفي الصحيح من حديث ابن مسعود : ( وإن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع أو باع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها . وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع أو باع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها  பல படித்தரங்களில் மனிதன்  பிறக்கின்றான்  1-இறைநம்பிக்கையாளனுக்கு  பிறந்து    இறைநம்பிக்கையாளனாக வாழ்ந்து     இறைநம்பிக்கையாளனாகவே       மரணிப்பவன் 2-இறைமறுப்பாளனுக்கு பிறந்து     இறைமறுப்பாளனாகவே வாழ்ந்து    இறைமறுப்பாளனாகவே         மரணிப்பவன் 3-இறைநம்பிக்கையாளனுக்கு பிறந்து      இறைநம்பிக்கையாளனாக வாழ்ந்து     இறைமறுப்பாளனாக மரணிப்பவன் 4-இறைமறுப்பாளனுக்கு பிறந்து     இறைமறுப்பாளனாக வாழ்ந்து     இறைநம்பிக்கையாளனாக    

ராமர்கோயில் திறப்பு விழா

     திறப்பு விழா பலரின்  உள்ளத்தை                    திறந்து காட்டும்        •••••••••••••••••••••••••••••••••                 கட்டுரை எண்  1508                      *********** மதம் இனம் மொழி நாடு  தாண்டிய மனித நேய பண்பாடுகளை முஸ்லிம் சமூகத்திடமே  அதிகம் காண முடியும் அரசு மூலமாகவோ அதிகாரவர்க்கத்தினர் மூலமாகவோ நாட்டு மக்களுக்கு  பொதுவான பாதிப்புகள்  ஏற்படுத்தப்பட்ட சூழல்களில்  அதை தட்டி கேட்கும் முதல் சமூகமாக இருப்பதும் முஸ்லிம் சமுதாயமே இயற்கை சீற்றங்களின் போது  எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது களமிறங்கி பணியாற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயமே முன்னனி  மற்ற எந்த சமுதாயமும்  இவ்விசயத்தில் வரம்புகளை உள்ளடக்கியே வாழ்கின்றனர் அடிக்கடி தனது மனதில் மறைமுகமாக ஒட்டியிருக்கும் அல்லது திணிக்கப்பட்டிருக்கும் வெறுப்பை வெளிப்படுத்தவே செய்கின்றனர் முஸ்லிம் சமூகத்தின் ஆத்ம திருப்திக்காக சிலர் அறிக்கை தருவதும் அரசியலுக்காக சிலர் குரல் கொடுப்பதும்  முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களில் பங்கு கொள்வதுமே அதிகபட்சமாக  பிற சமூகத்தினர்கள் தங்களை நடுநிலைவாதிகளாக காட்டிக்கொள்வதற்கு செய்யும் தந்திரமாகும் அத்தகையோரின்