லட்சியங்களை சிதைக்கும் எண்ணங்கள்

         லட்சியத்தை சிதைக்கும்
                   எண்ணங்கள்
               ★★★★★★★★★★★

               
வாழ்வில் சில எண்ணங்கள் 
பொன்னான உன் நேரங்களை 
விழுங்கிட துவங்கும்
அதன் தேடலில் மறு முயற்சிகள் யாவும் 
உனக்கு  கீழ்நிலையாக தோன்றும் 

ஆலோசனைகளும் அறிவுரைகளும்
உன் செவிகளை முடமாக்கிவிடும் 
நுண்ணிய பார்வைகளையும் 
உன்னில் எளிதாக ஜடமாக்கிவிடும் 

எண்ணங்களை  என்றாவது 
நீ அடைந்தாலும் சரி
அல்லது அதன் பயணத்தில்
இயலாமையை 
நீ அடைந்தாலும் சரி 
அல்லது தோல்வியை 
நீ சந்தித்தாலும் சரி 
இதற்காகவா 
எனது நேரங்களை
நான் வீணடித்தேன் ?

இதற்காகவா 
எனது லட்சியங்களை 
நான் புறம் தள்ளினேன் ?
என்றே நீ வருந்தும் நிலை தோன்றும் 

காரணம் 
உலகில் எந்த தேடலிலும்
நூறு சதவிகிதம் 
திருப்தியை எவராலும் 
அடைய முடியாது 

மனித மனம் 
மாறுதலை நோக்கியே பயணிக்கும் 

பிரியமான உணவு என்பதற்காக
பிரியாணியை என்றும் 
சமைப்பதும் இல்லை
பிரியமான உணவை 
மனம்  நாடாது இருப்பதும் இல்லை 

வாழ்வில் ஆசைகள் 
பிரியாணி போன்றது 
சமைத்தால் உண்ணலாம்
கிடைத்தால் உண்ணலாம்

கிடைக்காத சூழலில்
உணவை மாற்றலாம்
பசியை மாற்ற இயலாது 

பசியை அடக்குவதற்கு 
பல கை தானியம் உண்டு 

சிந்திப்போருக்கே  இது வாழ்கைத்தத்துவம்
படிப்போருக்கு 
இது வெறும் அடுக்கு வார்த்தைகள் மட்டுமே

ஆண் பெண் தேடல் 
இதில் முதல் ரகம் 

நிறங்களும்
உடல் பரிமானங்களும்
மாறுபட்டிருக்குமே தவிர
மனித தன்மையில் இருந்து
நிச்சயம் வேறுபட்டிருக்காது 

وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ‌ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ اِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

நான் என் மனதைப் பாவத்தில் இருந்து  பரிசுத்தமாக்கி விட்டதாகவும் கூறவில்லை
ஏனெனில் இறைவன் அருள் செய்யாவிடில் மனஇச்சை என்பது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது 
என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும் அருளாளனாகவும் இருக்கின்றான்

               (அல்குர்ஆன் : 12:53)



     நட்புடன்  J . யாஸீன் இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்