மதநல்லிணக்கம் மனிதநேயம்
மதநல்லிணக்கமும் நல்லுறவும்
*******************
கட்டுரை எண் 1540
*************
ஒரு சமூகத்துடன் நல்லுறவை வெளிப்படுத்துவதற்கும் மதநல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கும் அந்த சமூகம் செய்யும் வழிபாடுகளை முன்னின்று நடத்த வேண்டும் அல்லது அது போன்ற நிகழ்வுகளில் பங்கு கொள்ள வேண்டும் என்றில்லை
ஒரு மதத்தின் வழிபாடுகளில் உள்ளத்தில் நம்பிக்கை இல்லாமல் வெளித்தோற்றத்தில் அம்மதத்தின் செயல்களை காட்டிக்கொள்வதை
எந்த சமூகத்தாரும் மதநல்லிணக்கம் அல்லது சமூக நல்லிணக்கம் என்று அங்கீகரிக்க கூடாது
சமூக நல்லிணக்கம்
மதநல்லிணக்கம் என்பது
இரு சமூகமும் முகஸ்துதிக்காக வழிபாடுகளில் நம்பிக்கையற்று கலந்து கொள்வது அல்ல
மாறாக ஒரு மதத்தவர் வழிபாடுகளில் பிற மதத்தவர் குறுக்கிடாது இருப்பதும் தடை ஏற்பட காரணமாக இல்லாமல் இருப்பதுமே சமூக நல்லிணக்கம்
மத நல்லிணக்கம் பேணப்படுகிறது என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு
நல்லிணக்கத்தை வெளிப்படுத்த
மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்த
வணிகம் உண்டு
நட்பு பரிமாற்றங்கள் உண்டு
உதவி செய்யும் நல்லறங்கள் உண்டு
ஆறுதல் தரும் அரவணைப்பு உண்டு
இவைகளை உணராது
போலித்தனமாக நடிப்பது ஒவ்வொரு சமூகமும் தங்களையே ஏமாற்றிக்கொள்ளும் கபட நாடமாகும்
ஒரு மனிதன் இந்துவாக இருந்து கொண்டே மனிதநேயத்துடன்
நடமாட முடியும்
ஒரு மனிதன் கிருஸ்தவனாக இருந்து கொண்டே மனிதநேயத்துடன்
நடமாட முடியும்
ஒரு மனிதன் முஸ்லிமாக இருந்து கொண்டே மனிதநேயத்துடன்
நடமாட முடியும்
ஒரு மனிதன் நாத்தீகவாதியாக இருந்து கொண்டே மனிதநேயத்துடன் நடமாட முடியும்
மனிதநேயத்திற்கு
மதத்தை இனத்தை மொழியை இருப்பிடத்தை அளவுகோலாக வைப்பவன் அறிவாளியல்ல
எம்மதமும் சம்மதம்
என்பதும் அறிவாலியின் வாதம் அல்ல
ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து கொண்டு
மாற்றுக்கருத்துக்களை நாகரீகமாக பரிமாறிக்கொண்டு
பிற மனிதனின் தனிப்பட்ட உரிமையில் தலையிடாது இருப்பதே
மனிதநேயம்
மதநல்லிணக்கம்
وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ
நீங்கள் வணங்குவதை
நான் வணங்குவது இல்லை
وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ
நான் வணங்குபவனை
நீங்கள் வணங்குவது இல்லை
لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்
(அல்குர்ஆன் : 109:4,5,6)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment