தொழுகையில் பல எண்ணங்கள்
தொழுகையில் பல எண்ணம்
******************
தொழுகையை நிறைவேற்றுவதற்கு தக்பீர் கட்டியவுடன் உலக தொடர்பாக பல சிந்தனைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது
நல்லடியார்கள்
இறையச்சமுடையவர்கள்
போன்றவர்களுக்கு இந்நிலை ஏற்படாது
எனக்கு இந்நிலை ஏற்படுகிறது எனில் எனது தொழுகையை இறைவன் எப்படி ஏற்றுக்கொள்வான் ?
தொழுதும் பயனற்ற வழிபாடாக மாறி விடுமே ?
என்ற ஓர் சந்தேகம் அநேகருக்கு இயல்பாகவே ஏற்படும்
இந்த சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று
காரணம் தொழுகையை நிறைவேற்றும் போது
பிற சிந்தனைகள் இல்லாது எவராலும் தொழுகையை நிறைவேற்றவே இயலாது
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களும் கூட தொழுகையை நிறைவேற்றும் நிலையில் பல சிந்தனைகளுக்கு உட்பட்டார்கள் என்பதற்கும் தொழுகையின் ரக்அத்துகளை மறந்தார்கள் என்பதற்கும் அநேகமான சான்றுகள் உள்ளது
ஒவ்வொரு தொழுகையின் ரக்அத்துகளை தொழுகும் நிலையில் மனதில் எண்ணியே சரியாக நிறைவு செய்கிறோம்
தொழுகைக்கு தக்பீர் கட்டிவிட்டால் வேறு சிந்தனையே வராது என்றிருந்தால் தொழுகையின் எண்ணிக்கையும் மனதில் வர கூடாது
இமாமாக இருப்பவர் தொழுகையில் ஏதோ ஒன்றை மறந்து விட்டால் பின்பற்றி தொழுபவர்கள்
அதை உன்னிப்பாக கவனித்து ஆண்களாக இருந்தால் தஸ்பீஹை சப்தமிட்டு சொல்வதும் இமாமின் கிராத்தில் தடுமாற்றம் ஏற்பட்டால் அதை திருத்தி கொடுப்பதும் பெண்களாக இருந்தால் தவறிழைக்கும் இமாமின் செயலை கைதட்டி சுட்டிக்காட்டுவதும் தொழுகை என்ற சிந்தனைக்கு நேர் எதிரானதே என்பதையும் நினைவில் கொண்டால் தொழுகையில் ஓர் நிலை என்பது அறவே சாத்தியம் இல்லை என்பதை உணரலாம்
தொழில் நினைவுகள்
குழந்தை நினைவுகள்
குடும்ப நினைவுகள்
இப்படி பல நினைவுகள் தொழுகையில் ஏற்படவே செய்யும்
சுருங்க சொன்னால் எந்த மனிதனும் இறைவனை மட்டுமே நினைவில் வைத்து பிற எண்ணங்கள் நுழையாது வழிபாடுகளை நிறைவேற்ற இயலாது
அவ்வாறு ஏற்படும் நிலையில் கீழ்காணும் நபிமொழியில் குறிப்பிட்டிருப்பதைப்போல் செயல்பட்டால் போதுமானது
அதையும் மீறி தொழுகையில்
பிற எண்ணங்கள் நுழைந்தால்
எந்த தொழுகையும் பாழாகாது
عن عثمان بن أبي العاص أنه أتى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، إن الشيطان قد حَالَ بيني وبين صلاتي وقراءتي يلبسها علي، فقال رسول الله صلى الله عليه وسلم: «ذاك شيطان يقال له خِنْزَبٌ، فإذا أحسسته فتعوذ بالله منه، واتفل على يسارك ثلاثًا» قال: ففعلت ذلك فأذهبه الله عني.
[صحيح] - [رواه مسلم]
தொழுகையில் இருக்கும் நிலையில் ஷைத்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான் என்று உஸ்மான் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்ட போது
அவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் ஷைத்தான் கின்ஜப் என்ற பெயருடைய ஷைத்தான் ஆவான்
அவனது தீங்கில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என்றும் இடது புறம் மூன்று முறை துப்புவது போல் செயல்படுங்கள் என்றும் கற்று தந்தார்கள்
அவ்வாறே நான் செய்தேன்
என்னை விட்டும் அவனது தீங்கு நீங்கியது என்று குறிப்பிட்டார்கள்
நூல் .. முஸ்லிம் 2203
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment