முஸ்லிமின் மூல கடமை

           முஸ்லிமின் மூல கடமை
                   ***************
இஸ்லாத்தை ஏற்றுள்ள முஸ்லிமின் முதல் கடமை  மூல கடமை 

லாயிலாஹ இல்லல்லாஹ்
முஹம்மதுர்ரசூலுல்லாஹ் 

இறைவனின் தன்மைகள் என்ன
இறைத்தூதரின் வழிமுறைகள் என்ன

இவ்விரெண்டையும் முழு அளவில்  விளங்காது இஸ்லாத்தில் இருப்பவர்கள்
மறுமை வெற்றியை எதிர்பார்ப்பது கானல் நீரை எதிர் பார்த்து பரிதவித்து ஓடும் மனிதனின் நிலை போன்றதே 

எதிலும் பயணிக்கலாம்
ஆனால் அதன் பாதை 
லாயிலாஹ இல்லல்லாஹ் 
முஹம்மதுர்ரசூலுல்லாஹ் என்ற வாக்கியங்களின் சாரத்தில் மட்டுமே பயணிக்க  வேண்டும் 

இதை தாண்டிய எந்த சிந்தனைகளையும்
மூளையை செதுக்கப்பயன் படுத்தலாமே தவிர 
மூளையை அந்த சிந்தனைகளின் 
பக்கமே ஒதுக்கப் பயன்படுத்தி விடக்கூடாது 

அதன் விளைவே பல 
புது கொள்கைகளும் இஸ்லாத்தின் பெயரில் பல வடிவங்களில் நுழைக்கப்பட்டுள்ளது 

ஒரு வழிமுறையை வன்மையாக 
சாடி விட்டு அதே வழிமுறையை பெயர் மாற்றி நடைமுறைப்படுத்துவதும்
இஸ்லாத்தின் பெயரில் நுழைக்கப்பட்ட வழிகேடாகும் 


அறிவு மழுங்கியவனும்
அறிவை பயன்படுத்த தயங்குபவனும்
நேர்வழியில் இருந்து தடுமாறுவான்
அதன் மூலம் தடம் மாறுவான் 

அல்குர்ஆனின் சில செய்திகளை
நபிமொழிகள் விளக்கும்
நபிமொழியின் சில செய்திகளை 
நபித்தோழர்களின் கூற்றுகள் விளக்கும்
நபித்தோழர்களின் சில கூற்றுகளை 
ஆய்வுகளே தெளிவு படுத்தும் 

இதில் எதை புறக்கணித்தாலும்
நேர்வழியின் நறுமணத்தை 
சுவாசிக்க முடியாது 


مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَىْ لَا يَكُوْنَ دُوْلَةً بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ‌  وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌  وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏

தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்
எதனை  தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்

மேலும், அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்துகொள்ளுங்கள்
நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிக்க கடினமானவன்

                   (அல்குர்ஆன் : 59:7)



      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி











Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்