மனதை ஆளுபவனே மாவீரன்
மனதை ஆளுபவனே மாவீரன்
********************
தரையில் வேகமாக ஓடும் கனரக வாகனமாக இருப்பினும்
ஆகாயத்தில் அசுரமாக பறக்கும் வாகனமாக இருப்பினும்
கடலில் நீரை பிளந்து ஓடும் வாகனமாக இருப்பினும் அதன் வேகத்தை நினைத்த நேரம் கட்டுப்படுத்த அதற்கான துணை சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கும்
அந்த நம்பிக்கையில் தான் அனைத்து பயணிகளும் செல்கின்றனர்
மனிதன் பயணிக்கும் ஆசைகள் அவ்வாறு அல்ல
அறிவு தடுக்கும் போதும்
அறிவை தாண்டி மனம் பயணிக்கும்
மனிதனின் மனதை கட்டுப்படுத்தும் கருவிகளை மனிதனால் உருவாக்கும் பொருளாக இல்லை
இளமனது
இதில் மிகவும் ஆபத்தானது
அதனால் தான் மனதை ஆளுபவனை மாவீரன் என்று நபிகளார்
போதனை செய்துள்ளார்கள்
மனதை அடக்கும் கலைகளை
இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே அழகாக கற்றுத்தருகிறது
இஸ்லாம் இதயத்தில் இடம் பெற்ற அளவே அதன் வலிமையின் தாக்கம் அமைந்திருக்கும்
وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ اِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ
நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாக கூறவில்லை ஏனெனில் இறைவனின் அருள் இல்லாது மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாகவே இருக்கிறது
நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 12:53)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment