விஞ்ஞான உளரல்கள்

              விஞ்ஞான உளரல்கள்
                     ************

நிலவிலும் இதரகோள்களிலும்  ஆய்வுகள் செய்வது உலகில் வாழும் மனிதர்களை குடியமர்துவதற்கு அல்ல அந்தளவுக்கு அறிவீனமாக இறைவன் பூமியை படைக்கவில்லை 

பல காரணங்களில் முதன்மை காரணமாக இக்காரணமும்  யூடியூப் மேதாவிகளால்   பேசப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது  என்பதை தவிர வேறு இல்லை 

பூமிக்கு அருகில் இருக்கும் கோளில் ஆய்வு செய்யும் மனிதர்கள் குறிப்பிட்ட நாள் தங்குவதற்குரிய வாய்ப்பு அமையுமானால் அந்த கோளில் இருந்தே வேறு கோள்களுக்கு சுலபமாக  பயணிக்கும் வழிமுறையை எளிதாக அமைக்க முடியுமா ? அதற்கான வசதிகளை அந்த கோளில் உருவாக்க முடியுமா ? என்பது தான் வெங்கடேஷன் போன்ற அறிவியல்  ஆய்வாளர்கள் தரும் உண்மையான  தகவலாகும்

இவைகளை உள்வாங்காமல்
இதர கோள்களில் பல கோடிகளை செலவழித்து  கவனம் செலுத்துவது வீண் விரயம் என்றும் 
தோல்வி தரும் நிகழ்வுகள் என்றும் அடிக்கடி பலர் மேதாவித்தனமாக சமூகவலைதளம் மூலம் அறிக்கை போடுவதை காண முடிகின்றது 

ஆன்மீகத்தில் தொடர்புடையவர்கள் இதைப்பற்றி எங்கள் வேதமே அதை சொல்கிறது இதை சொல்கிறது என்று புலனாய்வு அறிக்கை போடுவதையும் காண முடிகின்றது 

இன்னும் சிலர் 
நிலவுக்கும் செவ்வாய்கிரகத்திற்கும் வேறுபாடு தெரியாது 
சந்திராயனுக்கும் குயூரியாசிட்டிக்கும் வேறுபாடு தெரியாது கண்ணில் தென்படும் கடந்த கால வீடியோக்கள் அறிவியல் கிராபிக்ஸ் வீடியோக்களை கற்பனையில் கலந்து அதற்கு ஏற்று  கதை கட்டி செய்திகளை பரப்புவதையும் காண முடிகின்றது 

ஞானமற்ற விசயங்களில் மேதாவிகள் போல் தலையிட்டு தங்களைத்தானே அன்றாடம்  இழிவுபடுத்திக் கொள்கின்றனர்


நிலவை இந்து நாடாக  அறிவிக்க வேண்டும் என்று ஒருவன் உளரலை அறிக்கையாக வெளியிடுகிறான்

ஆலீம்களே நிலவைப்பற்றி அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று இப்போதே விஞ்ஞானிகளுக்கு சொல்லி விடுங்கள் என்று ஒருவன் உளரை  அறிக்கையாக  வெளியிடுகிறான்

நிலவிலும் கடவுளை தேடி கிடைக்கவில்லை என்று ஒருவன் உளரலை  அறிக்கையாக  வெளியிடுகிறான் 

நிலவில் விண்கலம் தரை இறக்கப்பட்ட  பகுதிக்கு சிவசக்தி என்று  பெயர் சூட்டுவதாக பிரதமரும்  ஒரு புறம் அறிக்கை  வெளியிடுகிறார் 


இஸ்ரோ தலைவர் சோம்னாத் அவர்கள்
27-08-2023 அன்று திருவனந்தபுரத்தில் கொடுத்த பேட்டியில் 
சிவசகத்தி என்று பிரதமர் பெயர் சூட்டியதை விவாதிக்க வேண்டியது இல்லை என்று பிரதமருக்கு எதிராக  பதில் கூற முடியாமல்  கடந்து சென்றது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இடையிலும் பிரதமரின் மூக்கு நுழைப்பு வெறுக்கத்தக்கதாக மாறியுள்ளது என்றே அறிய முடிகின்றது 


அறிவியலில் ஆன்மீகத்தை நுழைப்பது ஆன்மீகத்தில் அறிவியலை நுழைப்பது அறிவியலில் அரசியலை நுழைப்பது
இந்நிலை மாறாத வரை பாமரமக்களும் அவர்களின் கற்பனைக்கு ஏற்றே அறிவியலை  சித்தரிப்பார்கள் 

இவர்கள் அறிவியலை படிப்பதை விட பகுத்தறிவை பண்படுத்துவது தான் தற்போதைய தேவை 


   நட்புடன்  J . யாஸீன் இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்