விஞ்ஞானம் என்றால் என்ன

        விஞ்ஞானம் என்றால் என்ன
                *****************

இறைவன் படைத்து முடித்து விட்டானா ? அல்லது இந்நிமிடமும் 
படைத்துக்கொண்டே உள்ளானா   ?
என்ற கேள்விக்கு ஒரு வரி பதில் 
படைத்துக்கொண்டே உள்ளான் என்பதே


உலகில் முதலிடம் வகிக்கும் பாலைவனங்களில் அன்டார்டிக் பாலைவனத்தில் குவிந்திருக்கும் மணல் பரப்பில் ஒரு சிறு மணல் வடிவமே  அண்டசராசரத்தில் உயிரினங்கள் வாழும் சிறு பூமி 




பூமியின் மேற்பரப்பில் கூட இதுவரை மனிதனின் கால்தடங்கள் படாத பகுதிகளும் ஏராளம் உண்டு 

மனிதனுக்கு இறைவன் வழங்கிய பகுத்தறிவின் உந்து விசையே 
பூமியை சுற்றி இருக்கும் ஒன்பது கோள்களின் ஆய்வுகள்

அவைகளில் ஒரு சதவிகிதம் கூட 
முழு ஆய்வுக்கு இதுவரை உட்படுத்தப்படவில்லை 

அறிவியல் துணை மூலம் இதுவரை  கண்டறியப்பட்டுள்ள கேலக்சிகள் இருபது ஆயிரம் என சொல்லப்படுகிறது



இதில் நிலவுப்பயணம் விஞ்ஞான பார்வையில் நம் வீட்டின்  அருகில் இருக்கும் அண்டை வீடு போன்றது 


அண்டை வீட்டு தரையின் சிறு பகுதியில் விண்கலத்தை இறக்கியதற்கே  மனிதனிடம் ஆணவம் தலை விரித்தாடுகிறது 

அதன் வினையாக நாத்தீக சிந்தனை 
வீங்கி உள்ளது 
உடல் வளர்ச்சி ஆரோக்யமானது
உடல் வீக்கம் ஆரோக்யமற்றது 

இறைவன் படைத்துள்ள பூமியில் 
ஒரு பொருளை கையில் எடுத்து 
இதை இவன் படைத்தான்
இதை அவன் படைத்தான்
என்று சொல்லும் அருகதையை இதுவரை எவனும் பெறவில்லை

இனிமேலும் பெறப்போவது இல்லை


ஒட்டு மொத்த பிரபஞ்சத்தில் 
எதையும் மனிதனால் படைக்கவும் முடியாது
எதையும் மனிதனால் அழிக்கவும் முடியாது 

மறைந்துள்ள பொருளை கண்டறிவதும்
கைவசமுள்ள பொருளை மாற்றி அமைப்பதும் தான் விஞ்ஞானம் 

விஞ்ஞானத்திற்கு விளக்கம் தெரியாதவர்கள் விதண்டாவாதம் மட்டும் பேச முடியும் 



قُلْ اَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ‌ اِیْتُوْنِىْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன ?
அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! 
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், 
இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!
என்று (நபியே!) நீர் கூறுவீராக

                (அல்குர்ஆன் : 46:4)

   நட்புடன்  J . யாஸீன் இம்தாதி










Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்