நீ கதாநாயகனா
நீ கதாநாயகனா
***********
வில்லனின் கதாபாத்திரம் வலுவானதாக இருந்தால் மட்டுமே கதாநாயகனின் கதாபாத்திரம் ஈர்ப்புடையதாக அமையும்
மென்மையான வில்லனை காட்டி அதிரடியான கதாநாயகனை அறிமுகம் செய்தால் சிறப்பான கதைகளும் இதயங்களில் எடுபடாது போய் விடும்
வாழ்கையும் அது போலவே
சோதனைகளே இல்லாத மனிதனின் வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது
நினைத்த பொருளை வாங்க முடியும்
நினைத்த இடம் பயணிக்க முடியும்
நினைத்த காரியத்தை நடத்த முடியும்
என்ற தகுதியை பெற்றவனுக்கு
உயரிய பொருளும் மதிப்பாக தோணாது
உற்றாரையும் அரவணைக்க தோணாது
சுற்றாரையும் தக்க வைக்க தோணாது
சோதனைகளால் சுவனம் சூழப்பட்டுள்ளது என்ற நபிமொழியும் இதன் காரணமாகவே இடம் பெற்றுள்ளது
நிழலின் அருமை
வெயிலில் நின்றவனுக்கே புரியும்
வெயிலின் கொடுமை
நிழலை தாண்டினால் மட்டுமே அறியும்
வாழ்வில் வில்லனை வெறுக்காதே
நீ கதாநாயகன் என்பதை மறவாதே
اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْۤا اَنْ يَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَـنُوْنَ
நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோர் என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
(அல்குர்ஆன் : 29:2)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment