Posts

Showing posts from August, 2023

விஞ்ஞான உளரல்கள்

              விஞ்ஞான உளரல்கள்                      ************ நிலவிலும் இதரகோள்களிலும்  ஆய்வுகள் செய்வது உலகில் வாழும் மனிதர்களை குடியமர்துவதற்கு அல்ல அந்தளவுக்கு அறிவீனமாக இறைவன் பூமியை படைக்கவில்லை  பல காரணங்களில் முதன்மை காரணமாக இக்காரணமும்  யூடியூப் மேதாவிகளால்   பேசப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது  என்பதை தவிர வேறு இல்லை  பூமிக்கு அருகில் இருக்கும் கோளில் ஆய்வு செய்யும் மனிதர்கள் குறிப்பிட்ட நாள் தங்குவதற்குரிய வாய்ப்பு அமையுமானால் அந்த கோளில் இருந்தே வேறு கோள்களுக்கு சுலபமாக  பயணிக்கும் வழிமுறையை எளிதாக அமைக்க முடியுமா ? அதற்கான வசதிகளை அந்த கோளில் உருவாக்க முடியுமா ? என்பது தான் வெங்கடேஷன் போன்ற அறிவியல்  ஆய்வாளர்கள் தரும் உண்மையான  தகவலாகும் இவைகளை உள்வாங்காமல் இதர கோள்களில் பல கோடிகளை செலவழித்து  கவனம் செலுத்துவது வீண் விரயம் என்றும்  தோல்வி தரும் நிகழ்வுகள் என்றும் அடிக்கடி பலர் மேதாவித்தனமாக சமூகவலைதளம் மூலம் அறிக்கை போடுவதை காண முடிகின்றது  ஆன்மீகத்தில் தொடர்புடையவர்கள் இதைப்பற்றி எங்கள் வேதமே அதை சொல்கிறது இதை சொல்கிறது என்று புலனாய்வு அறிக்கை போடுவதையும் காண முடிகின்றது 

விஞ்ஞானம் என்றால் என்ன

        விஞ்ஞானம் என்றால் என்ன                 ***************** இறைவன் படைத்து முடித்து விட்டானா ? அல்லது இந்நிமிடமும்  படைத்துக்கொண்டே உள்ளானா   ? என்ற கேள்விக்கு ஒரு வரி பதில்  படைத்துக்கொண்டே உள்ளான் என்பதே உலகில் முதலிடம் வகிக்கும் பாலைவனங்களில் அன்டார்டிக் பாலைவனத்தில் குவிந்திருக்கும் மணல் பரப்பில் ஒரு சிறு மணல் வடிவமே  அண்டசராசரத்தில் உயிரினங்கள் வாழும் சிறு பூமி  பூமியின் மேற்பரப்பில் கூட இதுவரை மனிதனின் கால்தடங்கள் படாத பகுதிகளும் ஏராளம் உண்டு  மனிதனுக்கு இறைவன் வழங்கிய பகுத்தறிவின் உந்து விசையே  பூமியை சுற்றி இருக்கும் ஒன்பது கோள்களின் ஆய்வுகள் அவைகளில் ஒரு சதவிகிதம் கூட  முழு ஆய்வுக்கு இதுவரை உட்படுத்தப்படவில்லை  அறிவியல் துணை மூலம் இதுவரை  கண்டறியப்பட்டுள்ள கேலக்சிகள் இருபது ஆயிரம் என சொல்லப்படுகிறது இதில் நிலவுப்பயணம் விஞ்ஞான பார்வையில் நம் வீட்டின்  அருகில் இருக்கும் அண்டை வீடு போன்றது  அண்டை வீட்டு தரையின் சிறு பகுதியில் விண்கலத்தை இறக்கியதற்கே  மனிதனிடம் ஆணவம் தலை விரித்தாடுகிறது  அதன் வினையாக நாத்தீக சிந்தனை  வீங்கி உள்ளது  உடல் வளர்ச்சி ஆரோக்யமானது உடல் வீக்கம் ஆரோக்

மனதை ஆளுபவனே மாவீரன்

        மனதை ஆளுபவனே மாவீரன்               ******************** தரையில் வேகமாக ஓடும் கனரக வாகனமாக இருப்பினும் ஆகாயத்தில் அசுரமாக பறக்கும்  வாகனமாக இருப்பினும் கடலில் நீரை பிளந்து ஓடும் வாகனமாக இருப்பினும் அதன் வேகத்தை நினைத்த நேரம்  கட்டுப்படுத்த அதற்கான துணை சாதனங்கள்  பொருத்தப்பட்டு இருக்கும்  அந்த நம்பிக்கையில் தான் அனைத்து பயணிகளும் செல்கின்றனர் மனிதன் பயணிக்கும் ஆசைகள் அவ்வாறு அல்ல அறிவு தடுக்கும் போதும்  அறிவை தாண்டி மனம் பயணிக்கும்  மனிதனின் மனதை கட்டுப்படுத்தும் கருவிகளை மனிதனால் உருவாக்கும் பொருளாக இல்லை  இளமனது இதில் மிகவும் ஆபத்தானது  அதனால் தான் மனதை ஆளுபவனை மாவீரன் என்று நபிகளார்  போதனை செய்துள்ளார்கள்  மனதை அடக்கும் கலைகளை  இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே அழகாக கற்றுத்தருகிறது  இஸ்லாம் இதயத்தில் இடம் பெற்ற அளவே அதன் வலிமையின் தாக்கம் அமைந்திருக்கும்  وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ‌ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ اِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ‏  நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாக கூறவில்லை ஏனெனில் இறைவனின் அருள் இல்லாது மன

நீ கதாநாயகனா

                   நீ கதாநாயகனா                        *********** வில்லனின் கதாபாத்திரம் வலுவானதாக இருந்தால் மட்டுமே கதாநாயகனின் கதாபாத்திரம் ஈர்ப்புடையதாக அமையும்  மென்மையான வில்லனை காட்டி அதிரடியான கதாநாயகனை அறிமுகம் செய்தால் சிறப்பான கதைகளும் இதயங்களில்  எடுபடாது போய் விடும்  வாழ்கையும் அது போலவே  சோதனைகளே இல்லாத மனிதனின் வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது  நினைத்த பொருளை வாங்க முடியும் நினைத்த இடம் பயணிக்க முடியும் நினைத்த காரியத்தை நடத்த முடியும் என்ற தகுதியை பெற்றவனுக்கு  உயரிய பொருளும் மதிப்பாக தோணாது உற்றாரையும் அரவணைக்க தோணாது சுற்றாரையும் தக்க வைக்க தோணாது சோதனைகளால் சுவனம் சூழப்பட்டுள்ளது என்ற நபிமொழியும் இதன் காரணமாகவே இடம் பெற்றுள்ளது   நிழலின் அருமை வெயிலில் நின்றவனுக்கே புரியும் வெயிலின் கொடுமை நிழலை தாண்டினால் மட்டுமே அறியும் வாழ்வில் வில்லனை வெறுக்காதே நீ கதாநாயகன் என்பதை மறவாதே اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْۤا اَنْ يَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَـنُوْنَ‏ நாங்கள் இறைநம்பிக்கை  கொண்டோர் என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் எ