வடிக்கப்பட்ட மூளை

       சிந்தனையை செதுக்க நான்கு
  சிந்தனையை மழுங்கச்செய்ய நான்கு
                  ***************

1-வாங்கும் பட்டங்களை
2-மிளிரும் தோற்றங்களை
3-வகிக்கும் பதவிகளை 
4-நிகழ்த்தும் உரைகளை வைத்து 
எவரின்  மார்க்க ஞானத்தையும்  எடை போடாதீர்கள் 

1-அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள்
2-எதிர் கேள்விக்கு தொடுக்கும் பதில்கள்
3-தவறுகளை ஏற்கும் மனப்பக்குவம் 
4-இயலாமையை  ஏற்றுக்கொள்ளும் தன்மை 
போன்றவைகளை உரசியே
ஒரு மனிதனின் மார்க்க உணர்வை 
எடை போடுங்கள் 

காரணம் முதலில் குறிப்பிடப்பட்ட  நான்கு அம்சங்களையும் ஒருவன்  தந்திரத்தின் மூலம் பிறரின் கருத்தை உள்வாங்குவதின் மூலம் வெளியில் காட்டிக்கொள்ள முடியும் 


இரண்டாம் நிலையில் குறிப்பிடப்பட்ட நான்கு  அம்சங்களை சுயமாக  சிந்திப்பதை தவிர்த்து எளிதாக எவராலும் பெற்றிட முடியாது


இதை மக்களும் உணராத காரணத்தினால் அறிஞனுக்கும்  அறிவிலிகளுக்கும் சமூகத்தில் வேறுபாடு தெரியாது போனது 

அறிவிலிகளும் அறிஞர்களை போல்  வலம் வருகின்றனர் 
உருவத்தில் அறிஞர்களைப்போல்  தங்களையும் சித்தரித்துக்கொள்கின்றனர் 


இப்பதிவை சீராக ஓரளவுக்கு நீ அறிந்து கொண்டால் கூட வழிகேடுகளை ஏமாற்றங்களை  விட்டு விலகி இருக்க முடியும் 

    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்