நாசமாகும் நற்கருமங்கள்

           நாசமாகும் நற்கருமங்கள்
                  ***************

அமல்களில் விளம்பர மோகம் வைரசுகளை விட வேகமாக முஸ்லிம் சமூகத்தில்  பரவி வருகிறது 

 எந்தளவுக்கு விளம்பர மோகம் பரவுகிறதோ அந்தளவுக்கு நரகத்தின் வேதனை அதிகரிக்கும் 

வலது கை செய்யும் தர்மம் 
இடது கை கூட அறியக்கூடாது 
என்றளவு நபியவர்கள் அமல்களில் தூய்மையை வலியுருத்தி உள்ளார்கள்

பள்ளிவாசலுக்கு ஒரு மின்விசிறியை வாங்கி கொடுத்து விட்டு 
அதன் சிறகுகளில் அன்பளிப்பு செய்தவர் இந்நபர்  என்று பதிப்பது 

கடமையான ஹஜ்ஜை முடித்து விட்டு அல்ஹாஜ் என்று அடைமொழி போட்டு தம்பட்டம் அடிப்பது 

இறையச்சத்துடன் நிறைவேற்ற வேண்டிய அமல்களை செல்பி புகைப்படம் எடுத்து சமூகவலைதளம் மூலம் பரப்பி லைக்குகளை எண்ணி பார்ப்பது 

எளிதாக செய்ய வேண்டிய ஹஜ் கடமையை நடைபயணமாக்கி 
அதன் மூலம் புகழில் பூரிப்பு அடைவது 

இவை யாவும் மார்க்க ஞானம் குன்றியவர்களின் நடைமுறையே 


அணியும் ஆடையில் தூய்மை
தங்கும் இடத்தில் தூய்மை 
உண்ணும் உணவில் தூய்மை 
ஆனால் அர்ப்பமாக செய்யும் அமல்களில் மாத்திரம் கலப்படம் 

ஒரு துளி  விஷத்தில் 
ஒரு லிட்டர் பசும்பால் கலந்தாலும் 
ஒரு லிட்டர் பசும்பாலில் 
ஒரு துளி விஷம் கலந்தாலும் 
பசும்பால் கழிவறையில் தான் கொட்டப்படும் 

பசும்பாலில் தூய்மையை மனிதன் விரும்புவதை விட 
அமல்களில் தூய்மையை இறைவன் அதிகம் விரும்புகிறான் 


 عَنْ سَعْدٍ ؓ قَالَ:سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ اللهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ

மக்களிடம் யாசகம் கேட்காத இறையச்சம் கொண்ட பிரபலத்தை விரும்பாத  அடியானை அல்லாஹுதஆலா நேசிக்கிறான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஃத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

                      நூல் முஸ்லிம்


 اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ‏
இறையச்சம் உடையவர்களின் நற்செயல்களையே அல்லாஹ் ஏற்று கொள்கின்றான்  

                 (அல்குர்ஆன் : 5:27)

        நட்புடன்  J . யாஸீன் இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்