துல்ஹஜ் பெருநாள் படிப்பினை இதுவே
இதுவே துல்ஹஜ்
பெருநாள் படிப்பினை
! ***************** !
ஹிஜ்ரி 1444 = 2023 வருடம்
**************
பால் குடி பருவமாக இருக்கும் நிலையில் இஸ்மாயீல் (அலை) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்கள் குர்பானி கொடுக்க முற்படவில்லை
தவழும் பருவத்திலும் குர்பானி கொடுக்க முற்படவில்லை
உன்னை பலி கொடுக்குமாறு இறைவன் கட்டளையிட்டுள்ளான்
நீ அந்த தியாகத்திற்கு தயாரா என்று மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் தந்தை நபி இப்ராஹீம் ( அலை) அவர்கள் கேட்கும் பருவத்தில் தான் குர்பானி கொடுக்கவே முன் வந்தார்கள்
அப்படியானால் இங்கு தியாகத்தில் முன்னனியில் இருப்பவர்
தந்தை இப்ராஹீம் (அலை ) அவர்களா ?
அல்லது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களா ?
இறைவன் என்றால் யார்
அவனது சொல்லுக்கு எந்தளவுக்கு கட்டுப்பட வேண்டும் ?
என்பதை சிறு பருவத்தில் ஊட்டி வளர்த்தியதின் காரணமாகவே
இறைவனின் கட்டளை என்று சொன்னவுடன் அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் எவ்வித சலனமும் மறுப்பும் இன்றி தன்னை பலியிட சம்மதித்தார்கள்
அந்த தியாகத்தை மெச்சும் விதமாக குர்பானி என்ற நடைமுறையை இறைவனும் ஏற்படுத்தினான்
சிறு வயதில் ஈமானிய உணர்வை
தனது மகனாருக்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் ஊட்டியிருக்காவிடில் இஸ்மாயீல் (அலை) அவர்களும் தன்னை குர்பானி கொடுப்பதற்கும் மறுத்திருப்பார்கள்
இப்ராஹீம் (அலை) அவர்களும்
இறை கட்டளையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையை நிச்சயம் சந்தித்திருப்பார்கள்
இதன் மூலம் பெற வேண்டிய படிப்பினை பாடம் ஒன்று தான்
பிள்ளைகளை ஈன்ற பெற்றோர்கள் ஈமானிய உணர்வை இறையச்சத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்
எவரது கட்டளைகளையும் விட இறைவனின் கட்டளையே
உடன் நிறைவேற்றப்பட வேண்டியது
என்பது தான் அடிப்படை பாடம்
இந்த அடிப்படை பாடத்தை புறக்கணிப்பவர்கள் துல்ஹஜ் பெருநாளை கொண்டாடுவதில்
அர்த்தம் இல்லை
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ
பின் (அம்மகன்) அவருடன் உழைக்கும் (வயதை அடைந்த) போது அவர் கூறினார்
என்னருமை மகனே!
நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன் இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!
(மகன்) கூறினார்
என்னருமைத்தந்தையே!
நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள் அல்லாஹ் நாடினால்
என்னை நீங்கள் பொறுமையாளர்களில் காண்பீர்கள்
(அல்குர்ஆன் : 37:102)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment