சமூக குழப்பம் உலமாக்கள் தடுமாற்றம்

       சமூக குழப்பமும் உலமாக்களின்
                        தடுமாற்றமும்
               **********************

இறைவனை பற்றியும்
இறைதூதர்களை பற்றியும்
முழு அளவுக்கு அல்லது ஓரளவுக்கு சுயமாக படித்து  கல்வி ஞானம் பெறாதவர்களிடம் 

ஹதீஸ் உசூல்கள் 
தப்ஸீர் கிதாபுகள்
சர்ச்சைக்குரிய சட்டங்கள்
இஸ்லாமிய வரலாறுகளை 

பல மணி நேரம் பேசுவது 
பல கட்டுரைகளை பதிவிடுவது
நிச்சயம் குழப்பங்களுக்கே வழி வகுக்கும்
காரணம் மேற் கூறப்பட்ட யாவும் பொதுமக்களே ஒப்பீடு செய்து பார்க்கும் வடிவத்தில் தமிழ் மொழியில் இதுவரை  கொடுக்கப்படவில்லை 

ஆலீம் ஆலிமா பட்டய தகுதிகளை வழங்கும் காலத்தை கூட மக்களின் மார்க்க பலவீனத்தை வைத்து  
சுருக்கி விட்டனர் 

ஒரு மாதத்தில் ஆங்கிலம் பயில வேண்டுமா 
ஒரு மாதத்தில் ஹிந்தி பயில வேண்டுமா
என்று விளம்பரங்கள் செய்து விற்பனை செய்யப்படும் புத்தகங்களை படிப்பதின் மூலம் பிற மொழிகளை தெளிவாக கற்று கொண்டவர்களை காணுவது அரிது 

அது போலவே தற்போது ஆலிம் ஆலிமா படிப்பு காலங்களும் பெயருக்கு முன் பதிக்கப்படும் பெருமை வாசகங்களாக  சுருக்கப்பட்டு விட்டது

இந்நிலையில் இஸ்லாமிய ஆய்வாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய செய்திகளை 
இஸ்லாமிய அறிஞர்களின் சபையில் பரிமாற வேண்டிய தகவல்களை 
பாமர மக்களிடம் கொண்டு செல்வது சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தாது
நிச்சயம் அது மார்க்க ஞானத்தில் மக்களிடம்  வறட்சியை வரம்பு மீறுதலை   மட்டுமே  ஏற்படுத்தும் 

தற்போது அது போன்ற சூழ்நிலையை தான் தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக காணப்படுகிறது 

பள்ளிவாசல்களில் பணியாற்றும் அறிஞர்களை விட 
சமூகவலைதளங்களில் சர்ச்சைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கும் அதிமேதாவிகள் பெருகி விட்டனர்

மார்க்க கல்வியை நோக்கி 
தேடல் குறைந்து தீர்வுகளை நோக்கிய ரசனைகளே மக்களிடம் அதிகமாக  காண முடிகின்றது 

இந்நிலை தொடருமானால் மார்க்க அறிஞர்கள் ஒதுங்கி மூடர்களின் கரங்களில் மார்க்த்தின் உண்மையான போதனைகள்  சிதைக்கப்பட்டு விடும் 


மார்க்க அறிஞர்கள் இதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்

ரசனை கூட்டங்களை உருவாக்குவது
மறுமையில் ஆலீம்களுக்கே கேடாக அமையும் 

சமூகத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு ஆலீம்களை மட்டுமே குற்றவாளியாக சித்தரித்து  தனது தகுதியை  பற்றி யோசிக்காது சர்ச்சைகளில் ஈடுபடும் பொதுமக்களும் அவர்களது தவறான நிலையை மாற்றிட முன் வர வேண்டும்
இல்லையெனில் அவர்களின் மறுமை வாழ்வும் நாசமாகி விடும் 

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனும் அல்ல
சிரைப்பவன் எல்லாம் நாவிதனும் அல்ல

என்ற வழமை மொழியே 
இப்பதிவுக்கு ஏற்றதாக உள்ளது  


يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا‏
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில்,

கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே  என்று கூறுவார்கள்


وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا‏

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும்
எங்கள் பெரியவர்களுக்கும் வழிபட்டோம் அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள் என்றும்  புலம்புவார்கள்


رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيْرًا‏

எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெரும்  சாபத்தால்  சபிப்பாயாக 

(அல்குர்ஆன் : 33:66,67,68)


     நட்புடன்  J . யாஸீன் ( இம்தாதி ) 

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்