சவால் நாத்தீகம் ஆத்தீகம்

            நீங்கள் சிற்றரிவாளனே
                             சவால் 
                 ******************


கண்டு பிடித்தல் வேறு
படைத்தல் என்பது வேறு 

இவ்விரெண்டுக்கும் வேறுபாடு தெரியாதவன் விஞ்ஞானியாக இருக்கலாம்
ஆனால் அறிவாளியாக இருக்க முடியாது

விஞ்ஞானம் மறைந்திருப்பதையும் தூரமாக இருப்பதையும் கண்டறிய பயன் படுமே  தவிர அவைகளை 
படைத்தவன் யார் ? என்று கண்டறிய உதவாது 

காரணம் அறிவியலுக்கும் சுய அறிவு என்பது இல்லை 



பிரபஞ்சத்தில் எந்த ஒன்றையும் 
மூலதனம் இல்லாமல் அறிவை கொண்டும் அறிவியலை கொண்டும் மனிதனால்  படைக்கவும் இயலாது

பிரபஞ்சத்தில் எந்த ஒரு மூலப்பொருளே இல்லாது  ஒழிக்கவும் அழிக்கவும்  முடியாது 

குறைந்த பட்சம் அறிவியல் துணை கொண்டு உயிரினங்களின் உடலில் இருக்கும் உயிரை நிலையாக தக்க வைக்கவும் இயலாது 

அறிவியலையும் அறிவையும் இணைத்து  நாத்தீகம் எனும் மூட நம்பிக்கையால்  குழப்பி கொள்ளாதீர்


அறிவியலை படிக்கும் பலர்
மக்கள் வணங்கும் படைப்புகளை தான் கடவுளா இல்லையா என்று ஆய்வு செய்கிறார்களே தவிர 

எதார்த்தமாக அவைகளை  படைத்தவன் யார் என்று ஆய்வு செய்வது இல்லை

அதனால் தான் 
மூடநம்பிக்கை எது ?
சரியான நம்பிக்கை எது ? என்று விஞ்ஞானிகளில் பலருக்கே புரிவது இல்லை 


நான் பல தந்தைக்கு பிறந்தேன் என்பவனும்
நான் தந்தையே இல்லாது பிறந்தேன்
என்பவனும்
பகுத்தறிவாளன் அல்ல 
அவன் சிற்றரிவாளன் 

நாத்தீகனும்
பல தெய்வ வழிபாடு உள்ளவனும்
சிற்றரிவாளனே 

இயன்றால் இக்கருத்தை யாரும் 
அறிவுப்பூர்வமாக மறுக்கலாம்
ஆனால் உங்களால் இயலாது என்பது ஆணித்தரமாக நாம் அறிந்தே உள்ளோம்


   நட்புடன்  J . யாஸீன் இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்